திருச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக மூத்த தலைவர் ராஜா, புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திரௌபதி இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பேசிய பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு கட்சி பிடிக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக பேசியதால் தான் வட இந்தியாவில் முற்போக்கு சக்திகள் தோற்று போனார்கள்.

நாங்களும் தான் இந்த மண்ணில் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த நாட்டையோ, இந்த மண்ணையோ ஒருபோதும் விட்டுக்கொடுத்து கிடையாது!
இது எங்களுடைய மண் எங்களுடைய நாடு என்றுதான் போராடியிருக்கிறோம்!