புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கஜா புயலினாலும், பருவமழைப் பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, விவசாயத் தொழிலாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்டத் தொழிலாளர்கள் என வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள, கிராமப்புறத்தில் வாழும் 35 இலட்சம் குடும்பங்கள், நகர்புறத்தில் வாழும் 25 இலட்சம் குடும்பங்கள் என சுமார் 60 இலட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது. இந்த நிதியுதவி தமிழ்நாட்டில் விளிம்புநிலையில் இருக்கக்கூடிய 60 இலட்சம் குடும்பங்களுக்கும் பேருதவியாக இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் புதிய தமிழகம் கட்சி சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார் அவர்.