வருந்துகிறேன்,,
நடுவம் தலைவர் செல்வாபாண்டியர், சுரேஷ்பாண்டியர் மற்றும் நதியா ஆகியோர் பெரம்பலூர் மன்டலமேடு அருகே காரில் சென்றபோது கோரவிபத்தில் சிக்கி செல்வாவும், சுரேஷூம் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள், நதியா பெரம்பலூர் அரசுமருத்துவமயில் சிகிச்சையில் உள்ளார்,
நெஞ்சு கணக்கிறது,
எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாரைத் தேற்ற,,
பாண்டியருக்கு புகழஞ்சலி
பாண்டியரே பாண்டியரே
செல்வா பாண்டியரே பாண்டியரே……
எங்களையெல்லாம் விட்டு சென்றதேன் பாண்டியரே செல்வா பாண்டியரே…..
எம்மினத்தை மீட்க ஒரு பாண்டியர் இருக்கிறார் என்றல்லவா இறுமாப்பாய் இருந்தோம் பாண்டியரே …
அனுதினமும் எம்மக்கள் எம்மினம் (தமிழினம்)என்றல்லவா இயங்கி கொண்டிருந்தாய் பாண்டியரே…..
இப்போது நீ எங்கே இளைப்பாறுகிறாயோ பாண்டியரே செல்வா பாண்டியரே …….
என் தம்பி என் தம்பிகள் என்றனைத்தாயே பாண்டியரே ….
இப்போது எங்களை (நடுவத்தை) யார் அனைப்பார் பாண்டியரே செல்வா பாண்டியரே…..
உன் எழுத்தை வாசிக்கும் போதெல்லாம் ஒரு பல்கலைக்கழகத்தில்
உன் மாணவனாக உணர்ந்தேனே பாண்டியரே …..
அதற்கு நான் ஆரம்ப நிலை தகுதியுள்ளவனாய் கூறினாயே பாண்டியரே செல்வா பாண்டியரே…
நான் ஒரு பல்கலைக்கழகம் நீங்கள் எல்லாம் என் மாணவர்கள் என்று கூறுவாயே பாண்டியரே ….
இனி உன் பல்கலைக்கழகத்தில் நீ இல்லாமல்
நான் எப்போது தேர்ச்சி பெறுவேன் பாண்டியரே செல்வா பாண்டியரே…..
என்னைப்போல் நீயும் சாதிகளை ஒழிக்க முடியாது தமிழ்சாதிஇணக்கத்தோடு தான் தமிழர் தேசியம் என்றாய் பாண்டியரே….
அதற்கு பள்ளர்கள்தான் (பாண்டியர்கள்) தலைமை தாங்குவாய் என்றாயே பாண்டியரே….
அப்படியான தலைமையை உருவாக்குவதே என் பணி என்றாய் பாண்டியரே….
இப்போது நீ எங்கு சென்றாய் பாண்டியரே
செல்வா பாண்டியரே….
அரசியலும் பொருளாதாரமும் தான்
இனத்தின் மீட்சி என்றாய் பாண்டியரே
அதற்கு நாம் ஆயிரமாயிரம் கோடிகளாய் பொருளாதார சந்தையாய் இருப்போம் என்றாய் பாண்டியரே….
இப்போது நீ எங்கே சென்றாய் பாண்டியரே
செல்வா பாண்டியரே…
நுண்ணரசியலாய் தமிழரல்லாதோர் எவ்வாறு தம்மினத்தை
அரசியல்அடிமை படுத்தியதை கற்றுக் கொடுத்தாய் பாண்டியரே
அதே நுண்ணரசியலையும் தம்பிகளுக்கு கற்று கொடுத்தாய் பாண்டியரே செல்வா பாண்டியரே …….
உள்ளூர் முதல் உலக அரசியலை கற்று கொடுத்தாய் பாண்டியரே
இன்று உன் குடும்பத்தையும் உன் தம்பிகளையும் தவிக்க விட்டு சென்றதேன் பாண்டியரே
செல்வா பாண்டியரே…
தன் சொந்த இனத்தின் அமைப்புகளைகூட சோத்து கட்சி , முட்டாள்கள், வண்டுமுருகன், வட்டத்தலைவர், அரசியல்தற்குறி என்று சமரசமில்லாமல் அறிவு செறுக்கோடு (தலைக்கணம்) விளாசினீரே பாண்டியரே
அதனால்தான் அந்த காலனும் உன் அறிவுசெறுக்கை கொய்து விட்டானோ என்ற ஐயம் எழுகிறதே பாண்டியரே செல்வா பாண்டியரே….
என் கப்பலில் (கொள்கையில்) ஒத்த கருத்து உள்ளவர்கள் மட்டுமே பயணம் செய்யலாம்
இங்கே நான் தான் மாலுமி என்றல்லவா இயங்கினாய் பாண்டியரே
இப்போது வழிகாட்டி விட்டு விட்டு எங்கே மறைந்தாய் பாண்டியரே செல்வா பாண்டியரே….
அதிவேகமாய் இயங்கியதாலோ நீயும் அதிவேகமாய் மறைந்தாயோ பாண்டியரே
அதே வீரியத்தில் உன் தம்பிகள் ஆயிரம் பாண்டியர்களாய்
இயங்குவோம் பாண்டியரே செல்வா பாண்டியரே…..
உன் முகம் நானறிந்து என் முகம் நீயறியா இரண்டொரு தடவை பேசினாய் பாண்டியரே
என்மூலம் பலதம்பிகளை உருவாக்க என் (எங்கள்)முகம்கான மும்பை வருவேன் என்றாய் பாண்டியரே
இப்போது உன் இறுதிமுகத்தைக்கூட காண முடியாமல் என்ன (என்) விதி சதிசெய்ததேனோ பாண்டியரே செல்வா பாண்டியரே…..
உன் கூற்றுபோல நீ இல்லாத கப்பலை உன் சிப்பாய்கள் மாலுமியாய் கரைசேர்ப்போம் அதற்கு நீ அழியாத ஒளியாய் வழியாய் திசைகாட்டுவாய் பாண்டியரே செல்வா பாண்டியரே…
என்றும் பாண்டியராக
இரா.சஞ்சீவ்குமார்
மும்பை.
அண்ணன் திரு. செல்வா பாண்டியர் அவர்களை நான் ஒரு முறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன். அவரின் இறப்பில் சந்தேகமாக உள்ளது. தமிழ் இன எதிரிகள் செய்த சதி வேலை தான் . அவர் இறப்பு தேவேந்திர குல வேளாளர் மல்லர் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பெரிய இலப்பு. அவரைப்போல ஒருவரை உருவாக்க இயலாது. அவரின் இறப்பு நம் இனத்தின் பெரிய துயரம்.என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவர் நினைத்ததை நடத்திக்காட்டுவோம் .அவரை பின்பற்றி செல்வோம் அவர் இறக்கவில்லை விதைக்க பட்டுள்ளார். அவர் புகழ் வாழ்க… விழித்து கொள்ளுங்கள் என் தேவேந்திர குல வேளாளர் மல்லர் மக்களே. அவர் நம் வழிகாட்டி. மீண்டும் எழும் தமிழர். மள்ளர் குலம்.வாழ்க வாழ்க. வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம்