பாண்டியன் என்ற சொல்லின் மூலச்சொல் / வேர் சொல் பள் என்கிறார் மொழிஞாயிறு தேவநேய பாவாணர். பள்ளுதல் என்பது உழுதல் என்று பொருள். ஆற்றங்கரை பள்ளத்தில் பள்ளுதல் செய்தவர்கள் பள்ளர்கள் ஆயினர். பாண்டி எனும் பொருள்படும் காளை மாட்டினை வைத்து பள்ளுதல் செய்வதை பாண்டிகம் என்றனர். பாண்டிகம் என்பது நிலத்தை உழுது பண்படுத்திய வயல்வெளி. வயல்வெளி போல கட்டம் அமைத்து ஆடும் பாண்டி ஆட்டம் என்ற பெயர் கூட பாண்டிகம் என்பதில் இருந்து வந்ததே. ஆக பள்ளத்தில் பாண்டியை (காளை மாடு) வைத்து பள்ளுதல்/பாண்டிகம் செய்த பள்ளர்கள் பாண்டியர்கள் ஆயினர்.
வேளாண்மையின் வளர்ச்சி மிகுதியால் சேர்ந்த தானியங்களையும், செல்வத்தையும் கொள்ளையிட வந்த கொள்ளை கும்பலிடம் இருந்து காக்கும் பொருட்டு வீரனாக இருக்க வேண்டிய தேவை ஏற்படவே. பள்ளர்கள் மல்யுத்தம்/ மற்போர் கலைகளை பயின்று மல்லர்களாக ஆயினர்.
பாண்டி/ பள்ளுதல்/பாண்டிகம் /பள்ளன் / பாண்டியர்கள் / மல்லன் /தேவேந்திரன் என்ற அனைத்து சொல்லிற்கும் ஆழமான பொருள் உண்டு. இதைத்தான் “எல்லா சொற்களும் பொருள் குறித்தவனவையே” என்று சொன்னார் தொல்காப்பியர்.
கள்ளர்/மறவர் சாதியினர் பாண்டியர்கள் அல்ல. இவர்களின் குலத்தொழில் உழவும் அல்ல.இவர்கள் மருதநில குடிகளும் அல்ல.கள்ளர்/மறவர் என்பவர்கள் பாலை திணையை சேர்ந்தவர்கள்.உலகின் முதல் மன்னர்களான பாண்டியர்கள் மருதநில உழவுக்குடியில் இருந்து தோன்றினார்களே அல்லாமல் பாலை நிலத்தில் தோன்றவில்லை.உலகில் தோன்றிய அனைத்து மன்னராட்சியும் வேளாண்மை நாகரீகமான உழவுக்குடியில் இருந்து தோன்றியதே அல்லாமல், ஆநிரை திருடுதல்/கொலை/கொள்ளை ஆகியவற்றை குலத்தொழிலாக கொண்ட களவுக்குடியில் இருந்து தோன்றவில்லை.
உலகின் பல நாடுகளை பாண்டிய மன்னர்கள் ஆண்டுள்ளனர். எனவே உலகில் (தமிழ்நாடு தவிர) 48200 ஊர் பெயர்கள் தமிழில் உள்ளது. அதில் 3600 ஊர் பெயர்கள் ப(ம)ள்ளர்களின் பெயரில் மட்டுமே உள்ளது. ஒரு ஊர் கூட கள்ளர்/மறவர் என்று இல்லை.அதேபோல் உலகம் முழுவதும் குடும்பா/குடும்பன்/பள்ளர்/மள்ளர்/மள்ளா/மல்லன்/ பள்ளன்/காலாடி என்று பள்ளர்களின் பெயரை மக்கள் தங்களது பெயரில் வைத்திருக்கிறார்களே அல்லாமல்….. எவரும் கள்ளர்/மறவர் என்று வைத்துக் கொள்ளவில்லை. இது ப(ம)ள்ளர்களே பாண்டியர்கள் என்று ஓங்கி பறைச்சாற்றுகின்றது. ஏனெனில் பாண்டிய மன்னர்கள்/பாண்டியகுல மக்கள் மட்டுமே பல உலக உழவு நாகரீகத்தோடு தொடர்புடையவர்கள். ஏரையும் போரையும் உலகிற்கே கற்றுக்கொடுத்ததினால் உலக மக்கள் தங்களின் பெயரில் குடும்பா/குடும்பன்/ குடும்பின்/ குடுமி/பள்ளர்/மள்ளர்/மள்ளா/மல்லன்/ பள்ளன்/பள்ளா/பள்ளாஸ் /காலாடி /இந்திரன் என்று பள்ளர்களின் பெயரை தங்களின் பெயரோடு வைத்திருக்கிறார்கள்.
ப(ம)ள்ளர்களான பாண்டியர்களை அழித்து தெழுங்கு நாயக்கர்கள் உண்டாக்கிய பாளையப்பட்டு ஆட்சியில் பல பாளையப்பட்டு ஆட்சி பகுதிகளை தெழுங்கு நாயக்கர்களிடம் பரிசாக பெற்று. ஜமின்தார்களாக /குறுநில மன்னர்களாக இருந்த கள்ளர்/மறவர்கள் எப்படி பாண்டியர்களாக இருக்க முடியும்?
ஏன் தெழுங்கு பாளையப்பட்டு ஆட்சியில் கள்ளர்/மறவர்களுக்கு பட்டம் சூட்டினான் தெழுங்கு நாயக்கன்? பாண்டியர்களை அழிக்க உதவியதற்காக கொடுக்கப்பட்ட பரிசு தான் அந்த தெழுங்கு பாளைப்பட்டு ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளை ஆள கள்ளர்/மறவர்களுக்கு குறுநில மன்னர்களாக முடிசூட்டினான் தெழுங்கு நாயக்கர்.ஆக பாண்டியர்களை அழித்து உண்டான தெழுங்கர்களின் பாளையப்பட்டு ஆட்சியில் பாளையப்பட்டு பகுதிகளை பரிசாக பெற்ற கள்ளர்/மறவர் சாதியினர் ஒருபோதும் பாண்டியர்களாக இருக்க முடியாது.
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் உள்ள ஒரு கள்ளர் சொல்வார் கள்ளர்/மறவர்கள் தான் பாண்டியர்கள் என்று. காரணம் கேட்டால் ஆங்கிலேயரோடு போரிட்டவர்கள் நாங்கள் தான். எனவே நாங்கள் தான் பாண்டியர்கள் என்பார். ஆனால் பாண்டியர்களோ ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே தெழுங்கு நாயக்கர்களால் வீழ்த்தப்பட்டு அடிமையாக்கப்பட்டனர்.தெழுங்கு நாயக்கர்களிடம் அண்டி பிழைத்து பாளையப்பட்டு ஆட்சியில் சொகுசாக வாழ்ந்து வந்த வாழ்க்கை பறிபோக போகிறதே என்று ஆங்கிலேயர்களை தெழுங்கு நாயக்கர்களோடு எதிர்த்த கள்ளர்/மறவர்கள் எப்படி பாண்டியர்களாக இருக்க முடியும்? ஆங்கிலேயர்கள் தமிழகத்திற்கு வந்தபோது மன்னராட்சியில் (பாளையப்பட்டு ஆட்சி) இருந்தவர்கள் தெழுங்கர்களும்,கள்ளர்/மறவர்களுமே. பாண்டியர்கள் அல்ல. பாண்டியர்களின் இறுதி போரான கயத்தாறு போர் மற்றும் தென்காசி போர் பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும்.
பாண்டியர்களே மருதநில நாகரீகத்தையும், நெய்தல் நாகரீகத்தையும் தோற்றுவித்தவர்கள் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு பற்றி பேசும்போது கூறிப்பிட்டுள்ளார் “தமிழ் சிந்தனையாளர் பேரவை” யை நடத்தும் உடையார் சாதியை சேர்ந்தவர்.தனது அநேக காணோளியில் பள்ளர்களே பாண்டியர்கள் என்று அழுத்தமாக பலமுறை பதிவிட்டுள்ளது தமிழ் சிந்தனையாளர் பேரவை.
பள்ளர்களை பாண்டியர்கள் என்று கேரள மாநில அரசு சொல்கிறது. அதாவது பள்ளன் (பாண்டியன்) என்று சாதிச் சான்றிதல் கொடுக்கிறது கேரள அரசு.
ரோமானிய அரசு பள்ளன்-பள்ளாண்டியன்-பாண்டியன் என்கிறது.
கிரேக்க நாட்டினை பள்ளர்கள் ஆண்டுள்ளனர். பள்ளர்களை பாண்டியர்கள் என்று கிரேக்க நாடு பதிவிட்டுள்ளது. கிரேக்க நாட்டினை ஆண்ட பாண்டிய மன்னனின் பெயர் பள்ளன் என்றும், அந்த பள்ள பாண்டிய மன்னனின் மகன் பெயர் கூட பள்ளன் என்று இருந்ததை கிரேக்க நாட்டு வரலாறுகள் பதிவிட்டுள்ளதை கடலியல் ஆய்வாளர் ஐயா ஒரிசா பாலு மற்றும் அறிஞர் மா.சோ.விக்டர் ஆகியோர் பலமுறை இதை தெரிவித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக கிரேக்க கடவுகள்களின் பெயர்கள் பள்ளன், பள்ள ஆதன், பள்ள ஏதேனா என்று இருப்பது பள்ளர்களே பாண்டியர்கள் என்பதை ஓங்கி உணர்த்துகிறது.
The original inhabitants of India என்ற நூல் Pandian or ruler of Palla(r)s என்று பள்ளர்களை பாண்டியர்கள் என்கிறது.
மேலும் பள்ளன்-பள்ளாண்டியன்-பாண்டியன் என்கிறது.
பல பள்ளு இலக்கியங்கள் பள்ளர்களே பாண்டியர்கள் என்கிறது.
மொழிஞாயிறு தேவநேய பாவாணார் தெளிவுப்படுத்தியை மேலும் தெளிவுப்படுத்தியுள்ளது Andhra Historical Research Society. அதாவது 1930 ல் Andhra Historical Research Society நிறுவனம் வெளியிட்ட வரலாற்று இதழில் “The Pallans, correctly Mallar, formed the Pandiyan army” என்று அதாவது “பள்ளன் எனும் மள்ளர்களே பாண்டியர் படையை உருவாக்கியவர்கள்” என்ற வரலாற்று தகவலை பதிவுசெய்து
பள்ளர்களே பாண்டியர்கள் என்று கூறியுள்ளது. Source: Journal of the Andhra Historical Research Society, Vol. 1& 2, The Razan Press, 1930, Page:83.
புறநானூறு மற்றும் அகநானூறு பாடல்களில் பாண்டியர்களின் “போர் மறவர்கள்” என்ற வரிகள் உள்ளதை வைத்துக்கொண்டு மறவர்களே (கள்ளர்) பாண்டியர்கள் என்பது ஏற்புடையது அல்ல.மதுரை மூன்றாம் தமிழ் சங்கத்தில் இருந்து வெளிவந்த புறநானூறு/ அகநானூறு காலகட்டத்தில் மறவர்/கள்ளர் சாதியினரே மதுரை/திருநெல்வேலி/தென்காசி/சிவலப்பேரி/கயத்தாறு….. etc போன்ற பாண்டியர்களின் வரலாற்று சிறப்புமிக்க ஊர்களில் கிடையாது. மறவர் /கள்ளர் சாதியினர் மீமிக பிற்காலத்தில் தென்ஆந்திரா பகுதியான திருவேங்கடம் பகுதியில் இருந்து தமிழக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தவர்கள். (அன்று திருவேங்கடம் (திருப்பதி), திருகாளத்தி (காளகாஸ்தி),நெல்லூர், சித்தூர்,புத்தூர் அனைத்தும் தமிழ்நாடு தான்). கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் தான் இராமநாதபுரம் மாவட்டத்திற்கே வருகின்றனர்.அதற்கும் பின்னரே திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகின்றனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,பழனி முருகன் கோயில்,
தென்காசி கோயில்,மணிமுத்தாறு கோயில்,நெல்லையப்பர் கோயில், பாண்டிய ராஜா கோயில்,திருச்செந்தூர் முருகன் கோயில்,கழுகுமலை முருகன் கோயில்,…etc ஆகிய ஆகிய கோயில்களை கட்டியது யார் என்று தமிழர்களிடம் கேட்டால் ……. பாண்டியர்கள் என்று உடனே பதில் கூறுவர். இவை யாவும் கட்டப்பட்ட காலங்கள் எது? மறவர்/கள்ளர் சாதியினர் தென்தமிழகம் வந்த காலங்கள் எது? இவைகளுக்கு பதில் தேடினால், மறவர்/கள்ளர் என்பவர்கள் பாண்டியர்கள் அல்ல என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துவிடும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கட்டியது தேவேந்திரன் (பள்ளர்) என்று தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலை கட்டியது குடும்பன் (பள்ளர்) என்று கட்வெட்டு ஆதாரம் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாண்டிய மன்னர்களால் உலக புகழ்மிக்க எங்கள் மீனாட்சி அம்மன் கோவில்/திருச்செந்தூர் முருகன் கோயில்/பழனி முருகன் கோவில் /நெல்லையப்பர் கோயில் கட்டப்பட்டுள்ளது என்று பீற்றும் தமிழர்களே…..கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தென்தமிழகம் வந்த கள்ளர்/மறவர்கள் எப்படி பாண்டியர்களாக இருக்க முடியும்? இவர்கள் தென்தமிழகம் வந்த பின்னரா இந்த கோயில்கள் எல்லாம் கட்டப்பட்டது?
குமரிக்கண்ட அழிவிற்கு பிறகு தமிழர்கள் தஞ்சமடைந்து சேரன்தீவு என்றழைக்கப்பட ஈழம்.அது இன்று இலங்கை என்றழைக்கப்படுகிறது. குமரிக்கண்ட அழிவிலிருந்து தமிழ் மக்களை ஈழத்திற்கு குடியமர்தியது பாண்டிய மன்னர்கள் என்று பாடல்களும் வரலாற்று ஆவணங்களும் உள்ளது.ஆக குமரிக்கண்ட அழிவிற்கு பிறகு தமிழர்கள் தஞ்சமடைந்த இலங்கையின் (ஈழம்/சேரன்தீவு) கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ் சங்கம் அமைத்தனர் பாண்டியர்கள். அன்றைய காலகட்டத்தில் இலங்கையும் தென்தமிழகமும் கடலால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை.
அந்த ஈழத்தில் கள்ளர்/மறவர் சாதியினர் கிடையாது.ஆனால் பள்ளர் எனும் மள்ளர்களோ ஐந்தில் ஒரு பங்கு மக்களாக ஈழத்தில் இன்றளவும் வாழ்கிறார்கள்.தெழுங்கு கண்டி நாயக்கர் மன்னர்கள் ஈழத்தை கி.பி.16-17 ஆம் நூற்றாண்டுகளில் கைப்பற்றி போது அங்கு இருந்தது,காளை மாடு மற்றும் பிறைநிலா ஆகிய சின்னங்களை ஒரே கொடியில் கொண்டு தமிழர்களை ஆண்ட தமிழ் பாண்டிய மன்னர்களின் “யாழ் தமிழ் பேரரசு”.தங்களை பாண்டியர்கள் என்று கூறி கொள்ளும் கள்ளர்/மறவர்கள் எப்படி ஈழத்தில் இன்று இல்லை? அதேபோல் இந்தியாவின் முதல் வேளாண்மை நாகரீகம் தோன்றிய மருதவேலி/மருதந்துறை எனும் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் இருபுறமும் மேற்கே பொதிகை மலையில் இருந்து கிழக்கே வங்க கடலின் வரையில் உள்ள ஊர்களில் வாழ்பவர்கள் ம(ப)ள்ளர் சாதியினரே.இந்தியாவிலேயே முதன்முதலில் 6500 ஆண்டுகளுக்கு முன்னரே தாமிரபரணி ஆற்றங்கரையில் வேளாண்மை செய்த சமூகம் பள்ளர்கள் என்று வட இந்திய ஆய்வாளர் திரு.ராக்கேஷ் சராவத் கூறியதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது நமது தமிழ் சிந்தனையாளர் பேரவை.தாமிரபரணி ஆற்றின் இருபுறமும் உள்ள ஊர்களில் நிலக்கிழார்களாக இருந்து வேளாண்மை செய்து வாழும் சாதியினர் பள்ளர்களே என்று தொல்லியல் ஆய்வாளர் காமராஜர் நாடார் மீமிக அழகாக விளக்கியுள்ளார். அதுமட்டுமின்றி தாமிரபரணி ஆற்றின் அருகில் உள்ள தென்காசி கோயில், மணிமுத்தாறு கோயில்,நெல்லையப்பர் கோயில்,பாண்டிய ராஜா கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், …etc ஆகிய கோயில்களோடு வரலாற்று தொடர்புடைய ஒரே சாதியினர் பள்ளர் எனும் மள்ளர்களே.அதிலும் பாண்டிய ராஜா கோயில் முழுக்க முழுக்க பள்ளர்களாலே கட்டப்பட்டு இன்றளவும் நிர்வகிக்கப்படுகிறது என்ற நிகழ்கால சான்றே பள்ளர்கள் பாண்டியர்கள் என்பதற்கான ஆதாரம். அதேபோல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் எந்த ஒரு தமிழ் சாதியினர்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பாக பள்ளர்களுக்கு என்றே 9 மடங்கள் (முன்பு 14 மடங்கள் இருந்தது) இன்றளவும் இருப்பதும், திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டியது பள்ளர் எனும் குடும்பன் என்ற கல்வெட்டு ஆதாரமும்,மேற்கு வாசல் வழியாக பள்ளர்கள் கோயிலுக்குள் சென்று பூஜை பொருட்களை வழங்குவது மரபாக இருந்ததும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தையும் தானமாக கொடுத்த பள்ளர்களுக்கே இன்றும் முதல் மரியாதை/பரிவட்டம்/மண்டகப்படி/தேர் ஓட்டும் உரிமை என்ற வரலாற்று செய்திகளுமே ம(ப)ள்ளர்கள் தென்தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதற்கான ஆதாரங்களாக இருந்து பள்ளர்களை
பாண்டியர்களாக நிருபிக்கின்றது. ப(ம)ள்ளர்களே தென்தமிழகத்தின் பூர்வீக குடிகள் என்று மொழியியல் ஆய்வாளர் கால்டுவெல் அவர்களும் தனது “தென்பாண்டி நாடு” என்ற நூலில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
திருநெல்வேலியை போல மதுரையையும் அதனை சுற்றியுள்ள ஊர்களிலும் வரலாறு உள்ள சாதியினரே மல்லர்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கட்டிய தேவேந்திரனுக்கு நன்றி கூறும் வண்ணம் நடக்கும் தேவேந்திரன் பூஜையில் கலந்து கொள்வது தேவேந்திரர் எனும் மல்லர்களே. மீனாட்சி அம்மன் கோயில் தெப்பக்குள திருவிழா தொடங்கி அனைத்து திருவிழாக்களிலும் மல்லர்களுக்கே முதல் மரியாதை. மீனாட்சி அம்மனும் சிவனும் மல்லர்களுடனும் மல்லத்திகளுடனும் தான் நாற்று நடுதல் /அறுவடை செய்தல் செய்கின்றனரே அல்லாமல் கள்ளர்/மறவர்களோடு அல்ல. அன்று மூன்றாம் தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள் பயன்படுத்திய இடுகாடு இன்று பழங்காநத்தம் என்று அழைக்கப்படுகிறது. கோவலன் புதைக்கப்பட்ட கோவலன் பொட்டல் எனப்படும் பழங்காநத்த இடுகாட்டினை இன்றளவும் தங்களது இடுகாடாக பயன்படுத்தும் ஒரே சமூகம் மல்லர் எனும் பள்ளர் சமூகமே. இன்றைய திருநெல்வேலியின் பழைய பெயரான மருதந்துறை/மருதவேலி என்ற பெயரில் இருந்து இது மருதம் எனும் வேளாண்மை செய்யும் ஊர் என்பது புரியும். அதுபோல மதுரையின் பழைய பெயரை தெரிந்து கொண்டால், கள்ளர்/மறவர்கள் என்பவர்கள் பாண்டியர்கள் அல்ல என்பது பளிச்சென்று தெரிந்து விடும். இதோ மதுரையின் பழைய பெயர் மல்லன் மூதூர் (மல்லன் மாநகர்/மல்லன் மதுரை). நந்தவனம் என்ற காட்டினை அழித்து பள்ளர் எனும் மல்லர்கள் உண்டாக்கிய ஊருக்கு மல்லன் மூதூர் என்று பெயர் வைக்காமல் கள்ளன் மூதூர் என்றா பெயர் வைப்பர்? இன்றைய கீழடி தான் அன்றைய மதுரை என வாதிடும் தொல்லியல் ஆய்வாளர்கள் தோண்டி கொண்டிருக்கும் இடம் கீழடியில் உள்ள பள்ளர்களின் நிலங்களை தான்.
மதுரை-கார்செரி காரின்நாயன்மார் மாசி மாத பூராடம் வழிபாட்டுத் திருவிழா,
திருபரங்குன்றம் முருகன் கோவில் திருகல்யாண விழா,பழனி மாரியம்மன் கோயில்,பழனி கோயில் தைப்பூசத் திருவிழா, வத்தலகுண்டு மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா, வாங்கலம்மன் மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா,சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா,அபிராமம் பொன் ஏர்ப்பூட்டும் இந்திர விழா, பெரம்பலூர் மாரியம்மன் கோயில் திருவிழா,சாத்தூர்-இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிழா….Etc இப்படி மல்லன் மூதூரை (மதுரை) சுற்றியுள்ள பல ஊர்களின் கோயில் திருவிழாக்களில் முதல் மரியாதை/மண்டகப்படி, பரிவட்டம் பெறுவதோடு, அனைத்து கோவில்களிலும் பல மடங்கள் பலவற்றை கொண்ட சாதியாக பள்ளர்கள் விளங்கி….தங்களை பூர்வகுடியாக நிருபித்து …..பாண்டியர்கள் என்று பறைச்சாற்றுகின்றனர்.
ஆக பாண்டிய மன்னர்களின் சிறப்புமிக்க திருநெல்வேலி மற்றும் மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க சாதியினராக இருப்பது பள்ளர் எனும் மல்லர்களே அல்லாமல் கள்ளர்/மறவர்கள் அல்ல. கி.பி.16 ஆம் நூற்றாண்டுகளுக்கு பின்னர் நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் கள்ளர்/மறவர்களுக்காகவே கள்ளழகர் திருவிழாவை தேனூரில் இருந்து மதுரைக்கு மாற்றினர் தெழுங்கு திருவிழா தொடங்கப்ட்டது. கி பி.15 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரையில் தெழுங்கு நாயக்கர்களும் கிடையாது…. அவர்களின் கூட்டாளிகளான கள்ளர்/மறவர்களும் கிடையாது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோவில்,திருபரங்குன்றம் முருகன் கோவில்,திருச்செந்தூர் முருகன் கோவில்,திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்….ஆகிய கோயில் வரலாறு ஒன்று போதும் பள்ளர்களே பாண்டியர்கள் என்று நிரூபிக்க.
குமரிக்கண்ட அழிவிற்கு பிறகு தமிழர்கள் தஞ்சமடைந்த ஈழத்திலும் (இலங்கை) கள்ளர்/மறவர் சாதியினர் கிடையாது.அதேபோல் கள்ளர்/மறவர்கள் தென்தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாகவும் கிடையாது. கள்ளர்/மறவர்கள் வடக்கில் இருந்து தமிழ் நாட்டின் காஞ்சிபுரத்திற்கு வந்தவர்கள் என்றும்,காஞ்சிபுரத்தில் இருந்து பின்னர் இராமநாதபுரம் வந்து குடியேறினர் என்றும் பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஆய்வாளர்களை விடுங்கள் கள்ளர்/மறவர்கள் கூட நாங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இராமநாதபுரம் வந்து குடியேறி பல நாடுகளை அமைத்து ஆண்டோம் என்று சொல்வார்கள்.வரலாறு பேசும் எந்த கள்ளர்/மறவரும் வரலாற்று சிறப்புமிக்க பாண்டியர்களின் திருநெல்வேலி/மதுரை பற்றி பேசியதே கிடையாது. அனைவரும் இராமநாதபுரம் மாவட்டம் பற்றி மட்டுமே பேசுவர்.ஆனால் பாண்டியர்களின் பூர்வீகமோ ஈழத்திற்கு பிறகு திருநெல்வேலி மற்றும் மதுரை உட்பட்ட தென்தமிழகமே.
ஈழத்தில் கள்ளர்/மறவர் சாதியினர் இல்லை என்பதும், தென்தமிழக திருநெல்வேலி மாவட்டத்திற்கே மீமிக பிற்காலத்தில் அதாவது கி.பி.15-16 ஆம் நூற்றாண்டுகளில் குறியேறியவர்கள் என்ற வரலாறுமே அவர்கள் பாண்டியர்கள் அல்ல என்பதை மீமிக தெளிவாக காட்டுகிறது.ஏனெனில் பாண்டியர்கள் ஆட்சி புரிந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் ஈழமும் ( கபாடபுர இரண்டாம் தமிழ் சங்கம்), தென்தமிழகமான திருநெல்வேலி, தென்காசி,கயத்தாறு.சிவலப்பேரி,மதுரை போன்ற இடங்களுமே.எனவே ஈழத்தோடும்,தென்தமிழகத்தோடும் தொடர்பில்லாத கள்ளர்/மறவர் சாதியினர் ஒருபோதும் பாண்டியர்களாக இருக்க முடியாது. அதுபோக பாண்டியர்களுக்கு எதிராக கள்ளர்/மறவர் இருந்தார்கள் என்று தமிழ் இலக்கிய பாடல்கள் மூலமும் கள்ளர்/மறவர் சாதியினர் பாண்டியர்கள் அல்ல என்பதை உறுதி செய்யலாம். மொழியியல் ஆய்வாளர் கால்டுவெல் அவர்களும் தனது “தென்பாண்டி நாடு” என்ற நூலில் கள்ளர்/மறவர் சாதியினர் வடக்கில் இருந்து/இராமநாதபுரத்தில் இருந்து வந்து திருநெல்வேலியில் குடியேறியவர்கள் என்று ஆராய்ந்து தெளிவுப்படுத்தியுள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் சீடர் தோமா என்பவர் கேரளா வந்தார் என்பது எப்படி முட்டாள்தனமோ…..அதேபோல் கள்ளர்/மறவர் என்பவர்கள் பாண்டியர்கள் என்பதும் முட்டாள்தனமே. எப்படியெனில்
இயேசு கிறிஸ்துவின் சீடர் தோமா என்பவர் கொல்லத்திற்கு வந்திருந்தபோது, கேரளா என்ற மாநிலமோ,மலையாளம் என்ற மொழியோ,மலையாளி என்ற இனமோ கிடையாது. மலையாளம் மொழி /மலையாளி இனம் தோன்றியது 500-600 ஆண்டுகளுக்கு முன்னரே.ஆக தோமா கேரளா வந்தார் என்பது தவறு. தோமா வந்தது தமிழ் சேர நாட்டு கொல்லத்திற்கு.
அதேபோல் தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருதவேலி/ மருதந்துறை (திருநெல்வேலி) ஊரின் பொறுநை (தாமிரபரணி) ஆற்றின் கரையில் மேற்கே பொதிகை மலையில் இருந்து கிழக்கே ஆதிநித்த குடும்ப நல்லூர் (ஆதிச்சநல்லூர்) /வங்ககடல் வரை ஊர்,நாடு,நகரங்களை தோற்றுவித்து பல புராதன கோயில்களை கட்டியெழுப்பி ஆட்சிபுரிந்தவர்கள் பள்ளர்/மள்ளர் எனும் பாண்டியர்கள். கி.பி 12-15 நூற்றாண்டுகளில் தென்தமிழகம் வந்து குடியேறிய கள்ளர்/மறவர்களை பாண்டியர்கள் என்பது நகைப்புக்குறியதே.கி.பி.15-16 ஆம் நூற்றாண்டுகளில் தான் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தெற்கு நோக்கி திருநெல்வேலி/சீவலப்பேரி/திருக்கறங்குடி பகுதிகளில் குடியேறினர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆக கள்ளர்/மறவர் சாதியினர் ஒருபோதும் பாண்டியர்களாக இருக்க துளியும் வாய்ப்பில்லை.
இந்திய சாதிகள் அத்தனையையும் தெய்வத்தின் பெயரால் மீமிக அடிமையாக வைத்திருந்த பிராமணர்களின் மனுதர்ம சட்டங்கள் பலவற்றையும் ஒழித்து,அனைத்து மனிதர்களும் சமமே என்று புதிய சட்டங்கள் பலவற்றை நடைமுறைக்கு கொண்டுவந்த ஆங்கிலேயர், கள்ளர்/மறவர்களின் குலத்தொழிலான ஆநிரை திருடுதல்/கொள்ளை ஆகியவற்றை கண்டறிந்து “குற்றப் பரம்பரை” என்று கூறிப்பிட்டு மீமிக கடுமையான தண்டனைகள் கொடுத்ததோடு இல்லாமல், அவர்கள் கல்வி அறிவு பெற்று திருந்தி வாழ “கள்ளர் பள்ளி” அமைத்ததை இங்கு நினைவு கூர்ந்தால் ஒழிய கள்ளர்/மறவர்கள் பாண்டியர்கள் என்ற மாயையை உடைக்க முடியாது.
நாங்கள் ஆண்ட பரம்பரை. எனவே நாங்கள் மீண்டெழுந்து ஆங்கிலேயர்களை அடக்கி இந்தியாவிலிருந்து விரட்டி விடக்கூடாது என்பதற்காக தான் எங்களை “குற்றப் பரம்பரை” என்று அறிவித்தனர் ஆங்கிலேயர்கள் என்பர் கள்ளர்கள். ஒட்டுமொத்த இந்தியாவையும் தனது துப்பாக்கி/பிரங்கி முனையில் கட்டுக்கோப்புக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர், மீமிக சின்ன கூட்டமான தென்தமிழக கள்ளர்/மறவர்களை கண்டா பயந்திருப்பர்? அதுசரி நாங்கள் ஆண்ட பரம்பரை என்கிறீர்களே,ஆங்கிலேயர்கள் தமிழகத்தை கைப்பற்றிய போது, பெருவாரியான அதாவது 60/75 பாளையப்பட்டு ஆட்சி பகுதிகளில் மன்னர்களாக இருந்தது தெழுங்கு நாயக்கர்,கம்மா,கம்பளம்,ராஜு,நாயுடுகள் தானே? பாண்டியர்களை காட்டி கொடுத்ததற்கு கூலியாக தெழுங்கர்கள் கொடுத்த 10-12 பாளையப்பட்டு ஆட்சி பகுதிகளில் தானே கள்ளர்/மறவர்கள் மன்னர்களாக இருந்தனர்? அப்படி என்றால் பெரிய ஆண்ட பரம்பரையாக இருந்த நாயக்கர்,கம்மா,கம்பளம், ராஜு, நாயுடு போன்ற சாதியினரை தானே ஆங்கிலேயர்கள் குற்றப்பரம்பரையாக அறிவித்திருக்க வேண்டும்? ஏன் உங்களை மட்டுமே குற்ற பரம்பரை என்று அறிவித்தான் ஆங்கிலேயன்? கையும் களவுமாக பிடிப்பட்டதாலும்,பல ஆய்வுகள் நீங்கள் ஆநிரை திருடுதல்/கொள்ளை ஆகியவற்றை குலத்தொழிலாக கொண்டவர்கள் என்பதை உணர்த்தியதால் தான், உங்களை குற்ற பரம்பரை என்று அறிவித்தான் ஆங்கிலேயன்.
மீமிக பிற்காலத்தில் தமிழின எதிரிகளான ஆரிய-திராவிடனால் கொடுக்கப்பட்ட தேவர் என்ற பட்டத்தை வைத்துக்கொண்டு….. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அரசர்களின் பெயரில் இருக்கும் தேவன்/தேவர் என்ற பெயரை காட்டி நாங்கள் அந்த பரம்பரை…. நாங்கள் இந்த பரம்பரை…. என்று பீற்றிக் கொண்டு திரிவது வரலாறாகாது.தேவர் என்ற பட்டம் இந்தியா முழுவதும் உள்ள பல மொழி மன்னர்கள் பயன்படுத்தியதற்கான ஒரு பெரிய பட்டியலே உள்ளது.தேவர்/தேவன் பட்டத்தை முதலில் பயன்படுத்தியது மள்ளர்குல உழவுக்குடி பாண்டிய அரசனே.தேவர்/தேவன் என்றால் உயர்தவர்/பண்பானவர்/இறைவன் என்று பொருள்.கள்ளர்/மறவர் குலத்தொழிலுக்கும் தேவர்/தேவன் பட்டத்திற்கும் துளியும் தொடர்பில்லை. இதை சில மாதங்களுக்கு முன்பு தமிழர் மறுமலர்ச்சி கழக தலைவர் முரளி நாடார் மீமிக தெளிவாக விளக்கியுள்ளார்.
மறவர்கள் பாண்டியர்கள் என்றும், கள்ளர்கள் சோழர்கள் என்றும், அகமுடையார்கள் சேரர்கள் என்றும் வரலாற்றுக்கு துளியும் பொருந்தா தமிழின வரலாற்றை அழிக்கும் வண்ணம் பல ஆண்டுகளாக கள்ளர்/மறவர்கள் பேசி வந்தனர். ஆனால் அகமுடையார்களோ நாங்கள் கள்ளர்/மறவர்களோடு தொடர்புடையவர்கள் அல்ல. எங்கள் அகமுடையார்களின் பண்பாட்டு/கலாச்சாரம்/குலத்தொழில் என்பது வேறு.கள்ளர்/மறவர்களின் பண்பாட்டு/கலாச்சாரம்/குலத்தொழில் என்பது வேறு. அவர்களோடு நாங்கள் ஒத்துபோகமாட்டோம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே அகமுடையார்கள் பிரிந்துவிட்டனர். 1930-க்கு முன்பு முக்குலத்தோர் என்ற பேச்சோ/வரலாறோ கிடையாது என்று கூறி “உலக அகமுடையார்கள் சங்கம்” என்ற ஒன்றை ஆரம்பித்து நடத்திவரும் திரு.ரஜினிகாந்த் அகமுடையார் அவர்களை தொடர்பு கொண்டால் விலாவாரியாக பாடம் எடுப்பார். ஆம் அகமுடையார் என்பவர்கள் மருதநில குடியினர்.பாலைதிணை குடியினர் அல்ல. தெழுங்கு பாளையப்பட்டு ஆட்சியின் தொடர்சியான தெழுங்கு திராவிட கட்சிகளே முக்குலத்தோர் என்ற மாயையை தோற்றுவித்தனர். கள்ளர்/மறவர் சாதியினரை விட அதிக மக்கள் தொகை கொண்ட அகமுடையார்களை முக்குலத்தோர் என்ற பெயரில் கள்ளர்/மறவர்களோடு இணைத்து அரசியல் இலாபம் அடைந்தனர் தெழுங்கு திராவிட கட்சிகள். ஆம் தெழுங்கு திராவிட கட்சிகளில் 35-40 % வட்ட-மாவட்ட பொறுப்புகளில் இருப்பவர்கள் கள்ளர்/ மறவர்களே.தென்னிந்திய நடிகர்/தயாரிப்பாளர் சங்கத்தை …..தமிழ் நடிகர் / தயாரிப்பாளர் சங்கமாக மாற்ற முடியாதவாறு தெழுங்கு திராவிடர்களின் ஆதிக்கம் உள்ள திரைப்பட துறையில் போலியாக தங்கள் வரலாறை பீற்றுவதும் கள்ளர்/மறவர்களே.இயக்குனர் தங்கர்பச்சனிடம் கேளுங்கள் விவரமாக சொல்வார்.கள்ளர்/மறவர்களின் அன்றைய தெழுங்கர்களின் பாளையப்பட்டு ஆட்சியின் கூட்டணி இன்றளவும் தெழுங்கு திராவிட கட்சிகளோடும் திரைப்பட துறையோடும் தொடர்கிறது.
மொழிஞாயிறு தேவநேய பாவாணர்,
தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் இணைவேந்தர் கதிர் மகாதேவன், கவிக்கோ அப்துல் ரகுமான்,கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு,அறிஞர் மா.சோ.விக்டர்,அறிஞர் காசி ஆனந்தன்,
அறிஞர் குணா,அறிஞர் அருகோ,அறிஞர் தேவ ஆசீர்வாதம்,தமிழ் சிந்தனையாளர் பேரவை,இழுமினாட்டி புகழ் பாரிசாலன் ….. etc இப்படி பலர் பள்ளர்களே பாண்டியர்கள் என்று ஆராய்ந்து கூறியுள்ளார்கள்.
பள்ளர் எனும் மள்ளர்களே பாண்டியர்கள் என்பதை “மீண்டெழும் பாண்டியர் வரலாறு” மற்றும் “பண்டைத் தமிழரின் நில மேலாண்மை” ஆகிய இரண்டு நூல்களையும் படித்து ஆராய்ந்து தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவண்,
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிவனின் பாண்டிய மரபினன்,
Dr.வே.ராகவன் பாண்டியன்.