தேவந்திர குல சொந்தங்களே!
பட்டியல் வெளியேற்றத்தினால் பள்ளர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா???
எம்பிசி யில் சேர்த்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடுமா???
இப்படி பொதுத்தளத்தில் உள்ள நண்பர்கள் சிலர் அப்பாவிகளாக கேட்கிறார்கள்!
பட்டியலை விட்டு வெளியேற்று என லட்சக்கணக்கில் திரண்டார்களே,
அவர்களுக்கு அதிலுள்ள சலுகைகள் தெரியாமலா இருந்திருக்கும்?
நோட்டுபுத்தகம், கல்வி உதவித்தொகை, தங்கும்விடுதி, தாட்கோ கடன் என ஏதாவதொரு வகையில் சலுகைகளை பெறாமலா இருந்திருப்பர்?
இருந்தும், தெரிந்தும், திரண்டார்கள் என்றால்,,
எப்போதோ கிடைக்கிற சிலபல ஆயிரங்களுக்காக தினம்தினம் அவமானப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகவேணடாம் என முடிவுசெய்து விட்டார்கள் என அர்த்தம்.
புதிய தமிழகம், கட்சி என்கிற வகையில் அதன் தலைவர் யாருடன் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம் எத்தனை சீட்டு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்,
ஆனால் ஒரு சமூகத்தை பட்டியலில் இருந்து நீக்கு என்கிறார் என்றால்,,
அந்த சமூகத்தின் பெரும்பான்மையோர் விருப்பத்தை தெரிந்து கொள்ளாமலா மாநாடு கூட்டுவார்?
மள்ளர் சமூகத்தின்மீது அவருக்கு இல்லாத அக்கரை மற்றவர்களுக்கு எப்படி வரமுடியும்?
பட்டியலில் இருப்பதால் ஒரு இழிவு/கறை(stigma) இச்சமூகத்தின் மீது விழுந்துவிட்டது என சொல்கிறார்,
பட்டியல் மாறினால் Stigma மறைந்து விடுமா, சமூகத்தின் அந்தஸ்து கூடிவிடுமா என்கிறீர்கள்!
உங்கள் வாதப்படி பட்டியல் மாறுதலால் சமூக அந்தஸ்து கூடுவதும் குறைவதும் இல்லை என்பது உண்மையானால்,,
இன்று எம்பிசி அல்லது பிசி யில் இருக்கிற சமூகத்தின் எந்த தலைவரையாவது,
ஒரு குட்டித் தலைவரையாவது “எங்கள் சமூகத்தை எஸ்சி பட்டியலில் இணைக்க வேண்டும்” எனச் அறிக்கை விடச் சொல்லுங்கள் பார்ப்போம், அட ஒரு அடையாளத்திற்காவது அறிக்கை விடச் சொல்லுங்களே, முடியாதுதானே,
அங்குதான் இருக்கிறது விஷயமே!
எங்களைப் பட்டியலில் அடைத்ததே எங்களின் முகவரியை அழிப்பதற்காகத்தான் என்கிற உண்மையை ஆரம்பத்தில் ஒருசிலர் புரிந்து வைத்திருந்தார்கள் எனவே வைஸ்ராய்கு கடிதம் எழுதினார்கள்,
எடுபடவில்லை,,
இருபதாண்டுகளுக்கு முன்பு எங்களைப் போன்ற சிலநூறுபேர்கள் போராடினோம், பெரும்பாலோருக்கு புரியவில்லை,
சிகரெட் புகைப்பதால்தான் எழுதவருகிறது என பாலகுமாரன் நம்பியதுபோல,!
பட்டியலில் இருப்பதால்தான் சமூகம் முன்னேறுகிறது என பெரும்பாலோர் நம்பினார்கள்,!
அறுபது வயதுக்குமேல் பாலகுமானுக்கு ஞானம் வந்ததுபோல,!
சமூக வளைதளங்களின் வளர்சிக்குப் பிறகு எங்கள் மக்களுக்கு விஷயம் புரிந்திருக்கிறது,!
“சமூக நீதி, சன்முகநதி” என பிதற்றிக் கொண்டிருந்தவர்களின் சாயம் வெளுக்கிறது,
மள்ளர்களை முன்னேற்றத்தான் பட்டியலில் வைத்திருக்கிறீர்கள் என்றால்,,
ஏழுபெயர்களில் அழைக்கப்படும் எங்களை “தேவேந்திர குல வேளாளளர்” என்கிற ஒரே பெயரில் அழைக்க வேண்டி அரசானை போடுவதற்கு காலம் கடத்துவதேன்?
மதாரி, பகடை, சக்கிலியரை இணைத்து அருந்ததியர் என அரசானை போடமுடிந்த உங்களால்,,
மோளக்காரரை இசைவேளாளராக மாற்றமுடிந்த உங்களால்,
எங்களை ஏன் தேவேந்திர குல வேளாளர் என அழைக்க அரசானை பிறப்பிக்க முடியவில்லை!
மார்க்சியம் தெரிந்திருந்தாலும்,
மனித உரிமைகள் புரிந்திருந்தாலும்,
திராவிட கருத்தியலுக்கு அடிமையானவர்களால், மள்ளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது,,!!
சமூகநீதி, சாதியொழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு,
பகுத்தறிவு,
பார்பண எதிர்ப்பு,
என்பதுதான் திராவிடக் கொள்கை என நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்,!
சமூகநீதிதான் அவர்களது கொள்கை என்றால்,, பொதுச்செயலர், மாவட்டசெயலர், நிதியமைச்சர், காவல்துறை அமைச்சர்,
என முக்கிய பொறுப்பில் பட்டியல் சாதியினரை அமர்த்தாதது ஏன்?
சாதியொழிப்புதான் அவர்களது நோக்கம் என்றால்,,
சாதிபார்த்து வேட்பாளர் நிறுத்துவது ஏன்?
மூடநம்பிக்கை ஒழிப்புதான் அவர்கள் நோக்கம் என்றால்,,
கருணாநிதி வீட்டில் சாயிபாபாவுக்கு என்னவேலை?
பார்பண எதிர்ப்புதான் நோக்கம் என்றால்,,
பெரியாருக்கு ராஜாஜியும், கருணாநிதிக்கு
N ராமும் ஆலோசகர்களாக இருந்தது எப்படீ,,
“நான் கன்னட பாப்பாத்தி” என சட்டசபையிலேயே அறிவித்தாரே ஜெயலலிதா!!
அது அவரின் சாதிவெறியாக பார்க்கவில்லை,
திராவிடத்தின் பார்பனிய எதிர்ப்பு என்பது வெறும் பம்மாத்து எனும் அவருடைய பிரகடனமாகவே பார்க்கிறோம்,,
அங்கேயே வீழ்ந்து விட்டது உங்கள் திராவிடம்,,
பெரியாரின் குலக்கொழுந்து தன்னை பாப்பாத்தி என சட்டசபையில் அறிவிக்கிறார்,
பெரியாரின் கருத்துக் கருவூலம் கருணாநிதியோ, எப்போதோ வாழ்ந்துமறைந்த சுதந்திரப்போராட்ட வீரர் சுந்தரலிங்கனாருக்கு,
சட்டசபையில் பெயர்வைக்கிறார், “ஆதிதிராவிடர் சுந்தரலிங்கனார்” என்று.
திராவிடத்தின் சாரம்,
சமூக நீதியோ,
சாதியொழிப்போ,
மூடநம்பிக்கை ஒழிப்போ,
பகுத்தறிவு பரப்பலோ,
பார்பண எதிர்ப்போ அல்ல,
அதுவெல்லாம் அவர்கள் தம்மை நிலைப்படுத்திக் கொள்வதற்காக போடப்பட்ட முழக்கங்கள்!!
அதன் உண்மையான சாரம், வந்தேரிகளின் சமூக, அரசியல், பொருளாதார நலனை காப்பாற்றுவதும்,
அதற்காக மண்ணின் மைந்தர்களின் முகவரியை அழித்து அவர்களை சொந்த நாட்டிலேயே எதிலிகளாக மாற்றுவதும்தான்.
சிலரை சிலகாலம் ஏமாற்றலாம்,
எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது,
கிரேக்கம், எகிப்து என முக்கால்மணிநேரம் மூச்சுவிடாமல் சிலாகித்துப் பேசக்கூடிய திராவிட சொற்பொழிவாளர்களால்,
உலக நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கக்கூடிய தமிழர் நாகரிகத்தையும் பாண்டியர் அரசாட்சியையும் ஏன் பேசமுடியவில்லை!!
எப்படி பேசுவார்கள் எதிரியின் மாண்பை குழைப்பதுதானே அவர்களின் நோக்கமாக இருக்கமுடியும்,,
பாண்டியர்களான நாங்கள் இருக்கிறோம் இனி எங்கள் வரலாற்றை எங்கள் மொழியில் உரத்துப்பேசுவோம்,
அதுவே எங்கள் அடையாள மீட்பு,,
அதற்காகவே பட்டியல் வெளியேற்றம்…!!!
மிகச் சரியான பார்வை..
சுமார் ஆறு முதல் எட்டு சதவிகிதம் அரசு சலுகைக்காக 90% தனியார் துறை மற்றும் வணிக ரீதியாக, அரசியல் ரீதியாக நம்மால் முன்னேற்றம் அடைய இயலவில்லை.
நமது தலைவர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இது எப்போதோ மாறியிருக்கும்…
NICE WE DON’T WANT S C WE WANT MY IDENTIFICATION ONLY IT MEANS INDIRAN DEVENDIRAN DEVENDIRA KULA VELALARS ONLY