அன்புடையீர்! இருக்கண்குடி ஶ்ரீமாரியம்மன் கோவில் 09.04.21. பங்குனி கடைசி வெள்ளிக்கிழமை (தேவேந்திரகுலம் மக்கள் மட்டுமே கொண்டாடும் விழா) மாலை 4 மணியளவில் முளைப்பாரியும், இரவு 12 மணியளவில் பொங்கல் வைத்து, மாவிளக்கு பூசையும், நடத்திய பின்பு 1 மணியளவில் முளைப்பாரியை ஆற்றில் கரைத்த பின்னர், வீடு திரும்புகின்றனர்! ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர்! இருக்கண்குடி கோவில் என்பது ஏறக்குறைய 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. கடந்த ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. கோவில் முன்புள்ள அனைத்து கடைகளும் (ஏறக்குறைய 150) தேவந்திரகுலம் மக்களே தேங்காய், பழத் தட்டுகள், மாலைகள், பலகாரங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள் மற்றும் தண்ணீர் ஏற்பாடுகள் அனைத்தும் அமைத்துள்ளனர்! பாண்டியர்கள் காலத்தில் நெல் நாகரிகம் படைத்த இருக்கண்ககுடி தேவேந்திரகுலம் மக்கள் இன்று ஶ்ரீமாரியம்மன் அருளால் ஆன்மீகத்தில் சிறந்து விளங்குகின்றனர்! நமது ஆய்வாளர்கள் இருக்கண்குடி சென்று களம் ஆய்வுகள் செய்து, தேவேந்திரகுலம் மக்களின் ஆன்மீகப் பண்பாட்டுச் சிறப்புகளை அறிந்து தமிழ் கூறும் நல்லுலகம் அறியச் செய்யுங்கள்! அவர்களின் குலதெய்வ வழிப்பாட்டின் மேன்மையை அறிவோம்! ஆன்மீக விழிப்புணர்வு தகவல் முனைவர் பாண்டியன், மதுரை.