கொடியன்குளம் சம்பவம்

தேவேந்திர குல வேளாளர்கள் எழுச்சிக்கு களம் அமைத்த கொடியன்குளம் கலவரம்!

Devendra Kula Vellalar Dr Krishnasamy Puthiya Tamilagam கொடியன்குளம் கலவரம்

1957-ஆம் ஆண்டு தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுடைய படுகொலையால், முதுகுளத்தூரில் ஏற்பட்ட கலவரம் சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கலவரம். ஆனால், அந்த மிகப்பெரிய கலவரத்தில் கூட அருகிலிருந்த மாவட்ட தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஒருங்கிணையவில்லை!

அதேபோல, 1968-ஆம் ஆண்டு தஞ்சை கீழ்வெண்மணியில் ஒரே இடத்தில் 44 தேவேந்திர குல வேளாளர்களைத் தீக்கிரையாக்கப்பட்ட போதும் அந்த மக்களுக்கு நீதி கேட்டு தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா பகுதிகளில் இருக்கக் கூடிய தேவேந்திர குல வேளாளர் மக்கள் கூட ஒருங்கிணையவில்லை!

1979 சிவகங்கை மாவட்டம் உஞ்சனையில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், அந்தப் படுகொலைக்கு நீதி கேட்டு அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய தேவேந்திரகுலவேளாளர் மக்கள் கூட ஒருங்கிணையவில்லை!

1982-ஆம் ஆண்டு தென்காசி, மீனாட்சிபுரம் கிராமங்களில் நடந்த கலவரத்தை தொடர்ந்து நிகழ்ந்த மதமாற்றம் ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கிய சம்பவம். மதம் மாறக் கூடாது என்று வாஜ்பாய், அத்வானி மற்றும் இந்து மதத் தலைவர்கள் அந்த கிராமத்திற்கே நேரடியாக வந்தார்கள். ஆனால், அப்போதும் அன்றைக்கு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருக்கக்கூடிய தேவேந்திரகுல வேளாளர் மக்கள் ஒருங்கிணையவில்லை!

1989-ஆம் ஆண்டு போடி-மீனாட்சிபுரம் கலவரத்திற்கும் அன்றைக்கு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த மதுரை தேவேந்திர குல வேளாளர் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணையவில்லை!

1995-ஆகஸ்ட்-31 அன்று ஆணவம், ஆட்சி, அதிகாரம் என அனைத்தும் ஒருங்கிணைந்து கொடியன்குளம் கிராமத்தை அடித்து நொறுக்கினார்கள். தட்டிக்கேட்க எவர் வரப் போகிறார்கள்? என்று ஏளனம் பேசினார்கள். அவர்களது கொட்டத்தை அடக்க, அடுத்த நாளே, அந்த கிராமத்திற்கு அடியெடுத்து வைத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்.

”BLOOD IS THICKER THAN WATER” – ”இரத்தம் தண்ணீரைவிடக் கெட்டியானது” என்று சொல்வார்களே, அதே போலத் தான் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் இரத்தம் துடித்தது. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு அவர் விடிய விடியச் சுற்றுப்பயணம் செய்து, இந்த உலகத்தில் உனக்கு உன்னைத் தவிர யாருமில்லை; உன்னுடைய உரிமைக்காக நீதான் எழுந்து போராட வேண்டும் என்று ஒரு கொடியங்குளம் கிராமத்திற்கு ஓராயிரம் கிராமங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மக்களை முதல்முறையாக ஒருங்கிணைத்தார்.

கொடியன்குளம் சம்பவத்திற்கு முன்புவரை தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களுக்கு எந்தப் பகுதியில் ஒரு பிரச்சனை நடந்தாலும், அந்தப் பிரச்சினையை அந்தப் பகுதி மக்களே தான் எதிர் கொண்டார்களே தவிர, இன்னொரு பகுதியிலிருந்து ஆதரவு குரல் கூட வந்தது கிடையாது.

கொடியன்குளம் பிரச்சினையில் ஏற்பட்ட தேவேந்திர குல வேளாளர் ஒருங்கிணைப்பு அந்த ஒரு கிராமத்தோடு பிரச்சனையோடு நின்றுவிடாமல். தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்குத் திறவுகோலாக அமைந்தது.

மனித வரலாற்றை எப்படி, கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு (கி.மு), கிறிஸ்து பிறந்ததற்குப் பின்பு (கி.பி) என்று பிரித்துப் பார்க்கிறோமோ, அதே போலத் தான் தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மாற்றத்தைக் கொடியன் குளம் கலவரத்திற்கு முன்பு, டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் வருகைக்கு முன், வருகைக்கு பின் என்றுதான் அளவிட வேண்டும்.

தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வீர வரலாற்றை எழுதும்போது, அதில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் பெயரும் அரசியல் பயணமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்!

கட்டுரை: நெல்லை சிவாதென்கலம்புதூர், திருநெல்வேலி 

Phone: +91 9629 360722


2 thoughts on “தேவேந்திர குல வேளாளர்கள் எழுச்சிக்கு களம் அமைத்த கொடியன்குளம் கலவரம்!

  1. First time i am visiting this website, i am wondering the data which has more valuable. really appreciate your effort and congrats to every one behind this work.. all the best to continue this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *