பள்ளர் – மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் முதல் மரியாதை செய்யப்படும் கோவில்கள்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
- பழனி முருகன் கோவில் (பழநி முருகன் கோவில்)
- திருத்தணி முருகன் கோயில்
- திருச்செந்தூர் முருகன் கோவில்
- கோவை, பேரூர் பட்டீசுவரர் கோயில்
- நாற்று நடவுத் திருவிழா (சகலமும் தானே என்ற தத்துவத்தை சுந்தரருக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், சுந்தரர் திருப்பேரூர் வந்திருந்தபோது விவசாயியாக அவதாரமெடுத்தார். சிவபெருமான் மள்ளராகவும் உமாதேவி மள்ளத்தியாகவும் நாற்று நடவு செய்வர்)
- கோவை, கோனியம்மன் கோயில்
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
- சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
- கழுகுமலை வெட்டுவான் கோயில்
- இராசபாளையம் பள்ளர் குல மக்களின் சித்திர வெண்கொற்றக்குடைத் திருவிழா
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் (இக்கோயில் கோபுரமே தமிழ்நாடு அரசு முத்திரையாக உள்ளது)
- சாத்தூர்-இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
- உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் – இராமநாதபுரம் மாவட்டம் (இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.)
- சமயபுரம் மாரியம்மன் கோயில்
- வத்தலகுண்டு மாரியம்மன் கோயில்
- பெரம்பலூர் மாரியம்மன் கோயில்
- பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில்
என 400 கும் மேற்பட்ட கோவில்களில் முக்கியமாக மூவேந்தர்கள் கட்டிய கோவில்களில் இன்றுவரை முதல் மரியாதை, தேர் இழுக்கும் உரிமை மற்றும் பரிவட்டம் பெறுபவர்களாக இந்த மூத்த வேளாண் குடி மரபினரான பள்ளர்/மள்ளர்/தேவேந்திர குல வேளாளர்கள் விளங்குகின்றனர்.
இந்த கோவில்களில் இன்று அர்ச்சகர்களாக உள்ள பிராமணர்களிடம் கேட்டு பாருங்கள், யார் இந்த கோவில்களை காட்டியது ? , யார் இந்த கோவில்களிலில் பரிவட்டம் பெறுவார்கள் ? என்று! அவர்கள் சொல்வார்கள் இக்கோவில்களை கட்டியது பாண்டியர்கள் என்றும் , பள்ளர்களே இக்கோவில்களில் முதல் மரியாதையை பெறுபவர்கள் என்றும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத நிலத்தை தோற்றுவித்து மருதவேலி / மருதந்துறை (திருநெல்வேலி) ஊரின் பொறுநை (தாமிரபரணி) ஆற்றின் கரையில் மேற்கே பொதிகை மலையில் இருந்து கிழக்கே ஆதிநித்த குடும்ப நல்லூர் (ஆதிச்சநல்லூர்) / வங்ககடல் வரை ஆற்றங்கரை நாகரீகத்தை தோற்றுவித்து குடும்பம், ஊர், நாடு, நகரங்கள் மற்றும் பல புராதன கோயில்களை கட்டியெழுப்பி ஆட்சிபுரிந்தவர்கள் பள்ளர்/மள்ளர் எனும் பாண்டியர்கள் எனபதை எவராலும் மாறுங்க முடியாது.
பாண்டிய மண்ணை ஆண்ட பாண்டிய மரபினரான பள்ளர் குலத்தார்க்குப் ‘பரிவட்டம்’ கட்டி முதல் மரியாதை செய்யும் முறையிலிருந்து பாண்டியர்கள் வெற்றிகளை கொன்டாடும் விழா வரை அணைத்து ஆதாரங்களும் இன்றுவரை உலகத்தார்க்கு உணர்த்தப்பட்டு வருகிறது. பல ஊர்களின் கோயில் திருவிழாக்களில் முதல் மரியாதை/மண்டகப்படி, பரிவட்டம் பெறுவதோடு, அனைத்து கோவில்களிலும் மடங்கள் பலவற்றை கொண்ட சாதியாக விளங்கிய பள்ளர்கள் தங்களை பூர்வகுடியாக நிருபித்து பாண்டியர்கள் என்று பறைச்சாற்றுகின்றனர்.
[சான்று]
Yea Crct… Namma History google and Ba history book layum iruku… ✨✌ Devendra kula velalar🌾❤️💚🌾