இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் 9.10.1924 அன்று பள்ளி ஆசிரியரான திரு.வேதநாயகம் – திரு.ஞானசவுந்தரி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் திரு.இம்மானுவேல் சேகரன். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
திரு.இம்மானுவேல் சேகரன் அவர்கள் இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்க துவங்கினர். அதற்கு ஒரு சான்றாக அவருடைய 18ஆவது வயதில் அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார்.
அதன்பின், இதம்பாடல் கிராமத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு. அமர்தம் கிரேஸ் என்பவரை மனந்தார். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்தனர். பிள்ளைகள்
இ. மேரிவசந்த ராணி
இ. பாப்பின் விஜய ராணி
இ. சூரிய சுந்தரி பிரபா ராணி
இ. மாணிக்கவள்ளி ஜான்சி ராணி போன்றவர்கள் ஆவர்.
திரு பெருமாள் பீட்டர் அவர்களின் பள்ளித்தோழரான திரு.இம்மானுவேல் சேகரன் பின்னாளில், சமூக அக்கறைக் கொண்டு 1945இல் இந்திய ராணுவத்தில் ஹவில்தார் மேஜராகப் பணியில் சேர்ந்தார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், இந்தி, உருசிய மொழி உட்பட ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்.
தேக்கம்பட்டி திரு.பாலசுந்தர்ராஜ் அவர்கள் அண்ணல் அம்பேத்கரை அழைத்து மதுரையில் 29.12.1946 அன்று நடத்திய தேவேந்திர குல வேளாளர் சங்க மாநாட்டில், அம்பேத்கர், திரு பெருமாள் பீட்டரோடு திரு இம்மானுவேல் சேகரனும் கலந்து கொண்டார் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
திரு இம்மானுவேல் சேகரன், இராமநாதபுரம் பகுதிவாழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டும் தனது ராணுவப் பணியைத் துறந்து விட்டு, 1951இல் நேரடியான சமூகப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1953 இல் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கி, மள்ளர் சமூகத்தினரை மட்டுமல்லாமல், அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கியதாக அவரின் சமூக விடுதலைப் போராட்டங்கள் உருவெடுத்தன.
அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி இயக்க மாநாட்டினை நடத்தினர். இதில் சாதி ஒழிப்பு, விதவை மருமணம், கலப்புத் திருமணம், ஆகிய தீர்மானங்களை மாநாட்டில் நிறைவேற்றினர்.
மரத்தடிகளிலும், தோப்புகளிலும், வயல்வெளிகளிலும் மக்களைச் சந்தித்தார். தீண்டாமை நிலவும் ஊர்களுக்கு சென்று, எதிர் நடவடிக்கைகளை மேற் கொண்டார். வழக்குப் போட்டார். தீண்டாமைக்கு எதிராக பெட்ரோமாக்ஸ் லைட் ஏந்தி ஊர்கள் தோறும் தனது ஆதரவாளர்களைத் திரட்டிச் சென்று கூத்துகள், நாடகங்கள் நடத்தி பரப்புரை செய்தார்.
26.5.1954 அன்று இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்தினார்.
2.10.1956 அன்று, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பங்கேற்பு மாநாட்டை முதுகுளத்தூரில் முன்னெடுத்தார்.
6.12.1956 அன்று அண்ணல் அம்பேத்கரின் மறைவையொட்டி மாபெரும் இரங்கல் கூட்டத்தை நடத்தினார். ஒடுக்க பட்ட சமுகங்களின் ஒப்பற்ற தலைவராக உருவெடுக்க தொடங்கினார்.
பூவைசிய இந்திரகுல சங்கத்தை நடத்திக்கொண்டிருந்த ஐயா திரு பேரையூர் பெருமாள் பீட்டருடன் சேர்ந்து சமூக வேலைகள் செய்து கொண்டிருந்த இளைஞரான திரு.இமானுவேல் சேகரன் அவர்களின் துடிப்பான வீரத்தையும், சமூகத்தில் நிலவிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவரது போராட்டதின் தீவிரத்தையும் பார்த்த காங்கிரஸ் தலைவர்களான திரு. காமராஜரும், திரு கக்கனும், பார்வர்டு பிளாக் கட்சியின் ஆதிக்கத்தை முடக்குவதற்கு சரியான நபர் மாவீரன் திரு. இமானுவேல் சேகரனே என்று தமிழக முதல்வர் காமராசு கூற தன்னை காங்கிரசு கட்சியோடு இணைத்துக் கொண்டார் திரு.இம்மானுவேல் சேகரன்.
ஒடுக்கப்பட்ட வகுப்பார் இளைஞர் கழகத்தின் மாவட்டச் செயலாளராகி, ஒடுக்குமுறை தொடருமேயானால் எம் மக்கள் இஸ்லாமைத் தழுவ நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
1957 இல் பசும்பொன் முத்துராமலிங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் பதவி விலக, மறு தேர்தல் நடந்தது. அதில் திரு.இம்மானுவேல் சேகரன் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். பார்வர்டு பிளாக் வேட்பாளரான சசிவர்ண் வெற்றி பெற்றவுடன், மறவர்கள் முதுகுளத்தூர் பகுதியில் வன்முறையில் இறங்கினர்.
1-9-1957 அன்று காடமங்கலம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் இறக்கிறார். இடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமெனில் சில தடைகளால் முக்கிய பாதைக்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. திரு.பெருமாள் பீட்டர் என்பவரும், திரு.இம்மானுவேல் சேகரனும் கமுதி காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர்.
மூதாட்டி உடல் சுமூகமாய் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இதில் இருந்து திரு. இமானுவேல் சேகரனுக்கு எதிர்ப்பு உள்ளூரில் ஏற்படுகிறது. அதன் விளைவாக 5-9-57ல் லாவி என்ற கிராமத்திலுள்ள குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. இதனால் கலவரம் நடக்கிறது. இம்மோதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பணிக்கர் இந்த கலவரத்தை தடுக்க 1957 செப்டம்பர் 09 ஆம் தேதி அனைத்து சமூக தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது. 10ம் தேதி நடைபெற்ற அமைதிக்கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பில் கலந்த ஆறு பேரில் திரு.இம்மானுவேல் சேகரனார் ஒருவர்.
முத்துராமலிங்கம் சமாதான கூட்டத்திற்கு வந்தபோது மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவித்த நிலையில், திரு.இம்மானுவேல் சேகரன் தனது மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, அத்தகைய மரியாதையைத் தராமல் நாற்காலியில் கால்மேல் காலிட்டு அமந்திருந்தார். இந்தக் கூட்டத்தில், ‘இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?’ எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) தன்னைக் குறைவு படுத்திப் பேசிய முத்துராமலிங்கத்துடன் சரி நிகராக நின்று, திரு.இம்மானுவேல் சேகரன் வாதம் புரிந்தார்.
மாவட்ட ஆட்சியரின் வேண்டுக்கொளுக்கினங்க அனைவரும் சமாதான கூட்டத்தில் கையேப்பம் இட்டனர். திரு. இம்மானுவேல் சேகரனும் கையெழுத்திட்டார். தனக்கு இணையாக வேறு தலைவர் உருவாவதை கண்டு சகிக்க முடியாத முத்துராமலிங்கம் கையெப்பம்யிட மறுத்தார். பின்னர் தனது ஆதர்வாளர்களை திரு. இம்மானுவேல் சேகரனை கொலை செய்ய தூண்டினார்.
திரு. இம்மானுவேல் சேகரன் அவரது தந்தையின் நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலையில் பரக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஓன்றில் கலந்து கொண்டு விட்டு இரவு 9 மணி அளவில் வீடு நோக்கி திரும்புகிறார்.
அப்போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சராமரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்புகிறது. விஷயம் காட்டு தீ போல பல்வேறு பகுதிகளில் பரவுகிறது.
12-9-1957 அன்று அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. 33வது இளைஞனின் எழுச்சி பயணம் மர்ம கும்பலால் தடுக்கப்பட்டு பாதை துண்டிக்கப்பட்டதால் 13-9-57ல் ராமநாதபுரம் மாவட்டம் சட்டம் ஓழுங்க சீர்குலைந்தது. இருதரப்பும் மோதியதில் 85 பேர் பலியாகினர்.
பார்வார்டு பிளாக் கட்சியின் தமிழ்நாடு கிளைத் தலைவர் முத்துராமலிங்கம் ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டார்.
33 வயதேயான தியாகி திரு. இம்மானுவேல் சேகரனின் துணிவும், எதிர்ப்பு மனநிலையும், சுயமரியாதை உணர்வுமே அவரை இன்றைய நாளிலும் – மள்ளர் சமூக மக்களின் இணையற்ற தலைவராக இருக்க காரணமாக அமைந்தது.
வாழ்க தியாகியாரின் புகழ்!!!
Wonderful unable to digedt