30-10-1957 அன்று சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் தி.மு.க தலைவர். சி.என்.அண்ணாதுரை பேசியதிலிருந்து சில பகுதிகள்;
திரு. இம்மானுவேல் தேவேந்திரர் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையில் அவர் தேவேந்திர குல மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். இம்மானுவேல் தேவேந்திரர் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டுமல்ல, உலகம் புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காகப் பாடுபட்டுத் தன்னயே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியது. திரு.முத்துராமலிங்கத் தேவர் மறவர்களுக்கு தலைவராக இருந்தார். அதே போல் தேவேந்திர குல மக்களின் தலைவராக விளங்கினார் திரு. இம்மானுவேல் தேவேந்திரர் என்பதை அமைச்சரவை அறியும். இந்நாடும் அறியும்.
முதுகுளத்தூர் இம்மானுவேல் தேவேந்திரர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அங்குள்ள மக்கள் தங்கள் தலைவரை இழந்ததற்காக ஆத்திரம் கொள்வதும் ஆத்திரத்தில் பழிக்குப் பழி வாங்க முயல்வதும் இயல்பு. அவர்களின் வீரிட்டெழும் உணர்ச்சியை ஆட்சியாளர் உணர்ந்திருப்பார்களேயானால் அங்கே போலீஸ் படையை உடனே அனுப்பி இருப்பார்கள் அந்த வட்டாரம் பூராவும் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் அல்லது நிர்வாகத்தில் வைக்கப்பட்டிருக்கும். சம்பவம் நிகழ்ந்த நான்கு நாட்களில் மேலும் கலவரம் வளரது தடுப்பதற்கான நடவடிக்ககைகளை எடுக்காது அவசர அவசரமானத் துப்பாக்கிப் பிரேயாகம் நடத்தப்பட்ட பிறகு வெங்கடேஷ்வரனை வைத்து விசாரனை நடத்தினார்கள்.
11-ஆம் தேதி அன்று இம்மானுவேல் தேவேந்திரர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நான்கு நாட்கள் கழித்து போலீஸ் படை வந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறது. தேவேந்திர குல மக்களின் தலைவர் போய்விட்டாரே என்று அந்த மக்கள் கொதித்தெழுவதில் என்ன ஆச்சரியம்..?
-சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உரை (30.10.1957)