தேவேந்திர குல வேளாளர்களின் உயிரில் கலந்த உணர்வுப்பூர்வமான கோரிக்கைகள் இரண்டு
- தேவேந்திர குல வேளாளர் பெயர்
- பட்டியல் வெளியேற்றம்
முதல் கோரிக்கைக்காக சென்னை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு கிராமம் கிராமமாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்டத்தில் நானும் அந்தக் குழுவினருடன் இரவு , பகலாக இரண்டு நாள்கள் பயணித்தேன்.
மத்திய அரசின் NCSC ன் துணை ஆணையாளர் இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு 15 தினங்களுக்குள் அனுப்பும்படி கேட்டுக்கொண்டும், இரண்டுமாதங்களாகியும் மாநில அரசு இதுவரை அனுப்பவில்லை.
இந்தக் குழு அறிக்கையை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வலியுறுத்த வேண்டி சங்கரன்கோயிலில் ஆதிதிராவிட அமைச்சர் திருமதி ராஜலெட்சுமி அவர்களை 17/11/2018 அன்று கிராம நாட்டாமைகளுடன் சென்று நானும் சந்தித்தேன்.
அது தொடர்பான ஆடியோ வெளிவந்துள்ளது.
‘அவர் பட்டியல் வெளியேற்றம் சாத்தியமில்லை, அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது எனவும், தேவேந்திர குல வேளாளர் பெயர் கோரிக்கை தொடர்பான மானுடவியல் ஆய்வறிக்கையை இரண்டு தினங்களுக்குள் அண்ணன் எடப்பாடியாரிடம் சொல்லிவிட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவிடுகிறேன்’ என்றும் உறுதியளித்தார்.
பட்டியல் வெளியேற்றம் இப்போதைக்கு கிடையாது என்பதே எங்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. சரி, இப்போதைக்கு தேவேந்திர குல வேளாளர் பெயரையாவது பெறுவோம் என்ற எண்ணத்தில் மனதை சமாதானம் செய்து கொண்டு வந்தோம்.
23/11/2018 திருக்கார்த்திகைத் திருநாள் அன்று மத்திய அரசின் NCSC ன் துணை ஆணையாளர் திரு எல்.முருகன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தேவேந்திர குல வேளாளர் பெயர்
சட்டமாக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் மானுடவியல் ஆய்வறிக்கையை உடனடியாக அனுப்பும்படியும் வெளிப்படையாக மாநில அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
வரும் வாரம் 11/12/2018 அன்று பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்திய அரசின் இறுதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த வாய்ப்பிற்காக நான்காண்டுகாலம் காத்திருக்கிறோம். ஆனால் இதுவரையிலும் மாநில அரசு நமக்காக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
17ம் நூற்றாண்டில் நாயக்கப் படைகளால் தோற்கடிக்கப்பட்டபின்னர், பள்ளுப்பாடல்கள், பள்ளு நாடகம் போன்றவற்றின் மூலம் உளவியல் ரீதியில் தாக்குதல் தொடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டோம். அதன்பின் SC என்ற உளவியல் ஆயுதத்தால் கட்டிப்போடப்பட்டோம். தற்போதுதான் நம் நிலையிலிருந்து மீண்டெழுந்து வர முயற்சி செய்கிறோம்.
இன்று …
சாத்தியமில்லாத கோரிக்கை என்று மாநில அரசு கைவிட்ட பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையுடன், தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையையும் இணைத்து மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு கேட்டு அரசு கடிதம் எழுதியதன் மூலம் , இரண்டு கோரிக்கையையும் ஒரே குழியில் போட்டு அழுத்தி அதளபாதாளத்திற்கு அனுப்பும் முயற்சி நடந்துள்ளது. இது நாயக்க மன்னர்களின் தாக்குதலை விட மிகக் கொடூரமான தாக்குதலாகதான் நாங்கள் உணர்கிறோம்.
நேரடியானப் போரில் நேர்மையாக ஈடுபடும் போர்ச்சமூகமான தேவேந்திர குல வேளாளர்களுக்கு , உளவியல் தாக்குதலை எதிர்கொள்ள போதிய பயிற்சி இல்லாததால் இந்த உளவியல் தாக்குதலால் நிலை குலைந்து போயுள்ளனர்.
17 ம் நூற்றாண்டில் வீழ்த்தப்பட்ட நாம் எழுவதற்காக முயற்சி செய்யவே நான்கு நூற்றாண்டு ஆகியுள்ளது. இப்போது நாம் வீழ்ந்தால் நிரந்தரமாக எழ முடியாமல் போய்விடுமே என்பதே என்னுடயை அச்சமாக இருக்கிறது.
உண்மையாக உழைத்து வாழக்கூடிய ஒரு சமூகம் உளவியல் ரீதியில் எழுந்து வரும் போது தாக்குதல் தொடுப்பது ஒரு ஈவு இரக்கமற்ற கொடூரச் செயல்.
எனவே இந்த தாக்குதலை மாநில அரசு உடனடியாகக் கைவிட்டுவிட்டு தேவேந்திர குல வேளாளர் மானுடவியல் ஆய்வறிக்கையை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி அனுப்பத் தவறினால் ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர்களின் கடும் கோபத்திற்கு, தமிழக அரசு ஆளாக வேண்டியிருக்கும் என்பதையும் இதன் மூலம் இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
உளவியல் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள….
இவன்
தேவேந்திர குல வேளாளர் நலச்சங்கம்
1924 தேவேந்திர திருக்குல்ல பள்ளர் பின்தங்கிய வகுப்பு. BC
1954 சாணார் SC to Bc மாற்றம் செய்தார் காமராஜ். அதே சமயம் Naam BC to SC மாற்றம் செய்தனர். இனி யாரும் SC என கூறவேண்டாம். அப்போதே naan BC தான் பிறகு நம்மை SC பட்டியலில் இருந்து வெளியே கொண்டுவருவதில் நாம் அரசாகத்திற்கு என்ன பிரச்சனை தெரியவில்ல…
இதர ஜாதிகள் மட்டும் Sc to MBc மாறினால் தவறில்லை…
நாம் மட்டும் SC பட்டியலில் இருந்து வெளியேறினால் குற்றமா…..