100 க்கு 100 சதவீதம் (பிற சாதியினர் அல்லாத) தேவேந்திரர் உறவின் முறைகளால் நடந்த தேவேந்திர குல வேளாளர்களின் இந்திர விழா (இடம்: அம்மச்சியாபுரம் தேனி மாவட்டம் – 13.01.2023). இந்த கிராமத்து இந்திர விழா மற்ற கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத நில மக்களாலும் மருத நில அரசர்களாலும் வழி வழியாக கொண்டாடப்பட்டு வந்த மருத நில தெய்வம், தேவேந்திரர்களின் கடவுள் வழிபாடாகிய வேந்தன் வணக்கம் எனும் இந்திர விழா மூவேந்தனில் மூத்தோன் அள நாடு கண்ட பாண்டியர்களின் புகழ் பாடும் வைகை நதிக்கரையில் ஆதி சிவனும் ஆதி அம்மனும் வீற்றிருந்து அருள் பாளிக்கும் பெருமைமிகு அம்மச்சியாபுரத்தில், நதிக்கரை நாகரிகத்தை உருவாக்கி ஊர் குடும்பு என்னும் அரசு முறையை உலகுக்கு கொடையளித்த தேவேந்திரகுல வேளாளர் மக்களும் அள நாட்டின் (தேனி மாவட்டம்)அனைத்து கிராம ஊர் குடும்பர்களும் பெரியோர்களும் புடைசூழ 13 .1 .2023 அன்று காலையில் வேந்தன் வழிபாடு என்னும் இந்திர விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்திர விழாவின் துவக்கமாக 07.01. 2023 அன்று காலையில் ஊர் பெரியவர்கள் மற்றும் தகைசால் தமிழ்ச்சான்றோர்கள் முன்னிலையில் சுயம்பு குரு மகா சன்னிதானம் “தேவேந்திர மடாதிபதி ராஜ தேவேந்திர ஸ்வாமிகள் – கோயமுத்தூர்” அவர்களால் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த திருவிழா தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை அம்மச்சியாபுரம் மற்றும் தமிழ் பண்பாடு கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் – தேனி ஆகியோர் குறுகிய காலத்தில் விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்து பிரமாண்டமான முறையில் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு முறையான அழைப்பின் பேரில் தேவேந்திரர் வரலாற்று ஆய்வு மையம் மதுரை கலந்து கொண்டது.
நமது வரலாற்று ஆய்வு மையத்தின் நோக்கத்தையும் மற்றும் பிற வரலாற்று ஆய்வு மையத்தினர் நமது இன மக்களின் வரலாற்றை ஆவணப் படுத்துவது எவ்வாறு என வழிகாட்டலுடன் தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் எவ்வாறு கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என்பதை விரிவாக எடுத்து கூறப்பட்டது.
இந்திர விழா – நினைவுக்குறிய நிகழ்வுகள்
1. வைகைகரையின் விளிம்பில் மேடை அமைத்து இந்திரன் சிலையை வைத்து மேடையையே கோவிலாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
2. இந்திரன் கடவுளுக்கு முகூர்த்த கால் நட்டிய நாளில் இருந்து தினமும் முறையான வைகை நீரில் அபிஷேகம் ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் பங்கு பெற்றது சிறப்பிலும் சிறப்பு.
3. கடந்த வெள்ளி கிழமை 13.1.2023 அன்று அதிகாலையில் நம் இன மக்களின் வழித்தோன்றல் மற்றும் தமிழ் நாட்டில் இந்திர வழிபாட்டை முறையாக கடைப்பிடித்து வரும் சுயம்பு சன்னிதானம் அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் வைகை கரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேசமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சன்னிதானம் சுவாமி அவர்கள் விழா நடைபெறும் மேடை வரை நடந்து சென்ற போது அனைவரும் தேவேந்திரர் குலத்தில் பிறந்த சன்னிதானம் அவர்களிடம் ஆசி பெற்றார்கள்.
இந்திர வழிபாட்டை முறையாக எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பல வேத நூல்களை ஆராய்ந்து மற்றும் பிற மடாலயங்கள் அணுகு முறையை தெரிந்து தமக்கென இந்திர வழிபாட்டினை தமிழ்நாடு முழுவதும் பரவ செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. முதலில் தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ள 140 ஊர் குடும்பங்களுக்கு இந்திர கடவுளுக்கு முன் பரிவட்டம் மற்றும் மாலை மரியாதை செய்தது பெருமைப்படத்தக்கது மற்றும் பாராட்டிற்குரியது.
5. ஊர் குடும்பர்களின் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது. இதே போல் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் இந்திர விழாவை எவ்வாறு நடத்துவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
6. மதிய உணவு சுமார் 2000 பேருக்கு சுவையான உணவு வழங்கினார்கள்.
7. பின்னர் தேவேந்திரர் குல மக்களின் மள்ளர் கம்பம் ஏறுதல், சிலம்பம் மற்றும் மாப்பிள்ளை கல் தூக்கும் போட்டியும் இந்த விழாவில் நடைபெற்றது இன்னும் நமது பாரம்பரியம் அழியாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவு படுத்தியது பாராட்ட தக்கது.
விழா அதிகாலையில் ஆரம்பித்து மாலை 6.00 மணி வரை இனிதே நிறைவு பெற்றது.
இவண்
வேளாண் விஞ்ஞானி முனைவர் ரா.தங்கச்சாமி
மதுரை
9600656426
தேவேந்திரர் வரலாற்று ஆய்வு மையம்