தேக்கம்பட்டி பாலசுந்தரராசு – தேவேந்திரகுல பெருந்தலைவர்

Devendra Kula Vellalar

தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் கொடி சிகப்பு (போர்) பச்சை (விவசாயம்)‌ உருக்வாக்கி கொடுத்த தென் பாண்டி வேந்தர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு அவர்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு 1930ஆம் ஆண்டு சிகப்பு பச்சை கொடி உருவாக்கப்பட்டது. தலைவர் என்று மதிப்போடு தேவேந்திர குல மக்களால் அழைக்கப்படும் பாலசுந்தரராசு அவர்கள் 4 -7 -1929  அன்று தெய்வேந்திரகுல வேளாளர் மகாசன சங்கத்தைத் தொடங்கினார். 1936 ஆம் ஆண்டில் சித்திரை முழு நிலவு நாளில் கோட்டூரில் இச்சங்கத்தின் முதல் மாநாட்டைக் கூட்டினார் . 3 -8 -1936  அன்று தேவாரத்திலும் 29 -12 -1946  அன்று மதுரையிலும் தேவேந்திரகுல மக்களின் முன்னேற்றத்திற்க்காக மாநாடு நடத்தினார். 1938 ஆம் ஆண்டு மண்ணின் மக்களை அடிமை நிலைக்கு பதப்படுத்தும் அரிசன சேவா சங்கத்திற்கு எதிராக போர்க்கொடி. 1939 ஆம் ஆண்டில் நடந்த மீனாட்சியம்மன் கோயில் நுழைவு போராட்டம் என்னும் பிராமணிய பித்தலாட்ட நாடக அரங்கேற்றத்திற்கு ஆதரவு மறுப்பு என தலைவர் பாலசுந்தரராசு அவர்களின் சமூக அரசியல் பயணம் தேவேந்திரகுல மக்களை முன்னேற்றப் பாதையை நோக்கி அணிதிரட்டியது.

தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் கொடி உருக்வாக்கிய வேந்தர் நினைவிடம்

தேவேந்திரகுல மக்களின் உரிமைக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடாற்றிய தலைவர் மாவீரர் பாலசுந்தரராசு அவர்கள் 11 -05 -1951  அன்று இயற்கை எய்தினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *