coimbatore dvk

பட்டியல் வெளியேற்றத்தினால் யார் பாதிக்கப்படுவர் ?

தேவந்திர குல சொந்தங்களே! பட்டியல் வெளியேற்றத்தினால் பள்ளர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா??? எம்பிசி யில் சேர்த்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடுமா??? இப்படி பொதுத்தளத்தில் உள்ள நண்பர்கள் சிலர் அப்பாவிகளாக கேட்கிறார்கள்! பட்டியலை விட்டு வெளியேற்று என லட்சக்கணக்கில் திரண்டார்களே, அவர்களுக்கு அதிலுள்ள சலுகைகள் தெரியாமலா இருந்திருக்கும்? நோட்டுபுத்தகம், கல்வி உதவித்தொகை, தங்கும்விடுதி, தாட்கோ கடன் என ஏதாவதொரு வகையில் சலுகைகளை பெறாமலா இருந்திருப்பர்? இருந்தும், தெரிந்தும், திரண்டார்கள் என்றால்,, எப்போதோ கிடைக்கிற சிலபல ஆயிரங்களுக்காக தினம்தினம் அவமானப்பட்டு மன […]

Continue Reading

கடும் கட்டுப்பாட்டில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்..!

வருடம் தோறும் செப்டம்பர் 11ம் தேதியன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. இந்த தினத்தில் கூடும் கட்டுக்கடங்காத கூட்டத்தினை ஒழுங்குப்படுத்தும் பொருட்டு கடந்த 2013ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவரைத் தொடர்ந்து வந்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அதனையே பின்பற்றி வந்தனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் 11ம் தேதியன்று நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வருபவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளார் மாவட்ட […]

Continue Reading

தியாகி இம்மானுவேல் சேகரனார் வரலாறு – பகுதி-1

பரமக்குடி அருகேயுள்ள செல்லூர் 1924 அக்டோபர் 9-ல் பெரியவர் வேதநாயகம் வாத்தியாருக்கும், ஞானசவுந்தரி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார், தொடக்கக்கல்வியை டி.இ.எல்.சி. பள்ளியிலும், உயர் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்சு உயர்நிலைப் பள்ளியிலும் கற்றார். மரணத்தின் போது அவர் கிறித்துவர் இல்லை என சொல்லிக் கொண்டாலும், குழந்தைப்பருவம் முதல் தொடங்கிய இளமைக் கால அனுபவங்கள் அனைத்தும் ஒரு சாராசரி கிறித்துவருக்கே உரிய திருச்சபை அடையாளங்களோடு எழுச்சி பெற்றன. படிக்கும்போது தனது 18-ஆவது வயதில் இந்த நாட்டின் விடுதலைக்காக வெள்ளையனே வெளியேறு […]

Continue Reading

எப்பொழுது நம் சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவது???

வியாபாரத்தில் மார்வாடிகளும், நாடார்களும் ஜெயிக்கிறார்கள். முன்னோடியாக இருந்த முஸ்லிம்கள் தோற்று போகிறார்கள். ஏன்?* நமது பைத்துல்மால் சிஸ்டம் நாடார்களாலும், சேட்களாலும் பின்பற்றப்படுகிறது. ஒருவர் ஒரு பலசரக் கடை வைக்கிப் போகிறார் என்றால், அந்த இனத்தின் சங்கத்தில் (பைத்துல் மால்) உள்ள பலசரக்குக் கடை வியாபாரம் பார்ப்பவர்கள் அனைவரும் தங்களின் பொருட்களை கடனாக கொடுப்பார்கள்.* ஒருவர் அரிசி தருவார். இன்னொருவர் பருப்பு தருவார். இன்னொருவர் சாம்பு, சோப்பு தருவார். இப்படி ஒவ்வொருவராக பொருளை தந்து, புதிய தொழில் தொடங்குபவரின் […]

Continue Reading

ஆடிப்பெருக்கும் தேவேந்திரகுல வேளாளர்களும் !

ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக இந்து சமய விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் ( தேவேந்திரகுல வேளாளர்கள் ) இந்நாளில் […]

Continue Reading

தேவேந்திரகுல பெயர் குறித்த நிலப்பத்திர ஆவணப் பதிவுகள், மற்றும் மற்ற அரசு பதிவுகள் (1956 க்கு முன்பு)

தேவேந்திரகுல வேளாளர் பெயரை அரசு ஆணையாக பெற தொடர்ந்து அரசிற்கு ஆவணங்கள் கொடுத்து வருகிறோம். தற்போது ” தேவேந்திரகுலம் ” என்ற பெயரில் உள்ள நிலப்பத்திர ஆவணப் பதிவுகள், மற்றும் மற்ற அரசு பதிவுகள் (1956 க்கு முன்பு ) இருந்தால் அந்த பக்கத்தை மட்டும் ஸ்கேன் செய்து அப்படியே என்னுடைய மின்னஞ்சலுக்கு ( ttathangaraj@gmail.com , kanagarajalagu@gmail.com , cjsivakumar@gmail.com, mallarfm1@gmail.com ) அனுப்பவும். இது அவசியம் , உங்கள் பகுதி ஆவணமும் அரசு ஆவணத்தில் […]

Continue Reading

ஜூலை 23, 1999 திராவிடத்தின் தாமிரபரணி தமிழினப் படுகொலை நாள்

தமிழர்கள் சந்தித்த மற்றுமொரு இரத்த சரித்திரம்…! ஒரு இனம் போரில் தோற்றுவிட்டால் அவர்கள் எப்படி எப்படியெல்லாம் எதிரிகளால் அழித்தொழிக்கப் படுவார்களோ அப்படியான அழித்தொழிப்பின் அத்தனை கூறுகளையும் கொண்டது தான் 1999 ஜூலை 23ல் புதிய தமிழகம் கட்சியினால் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூலி உரிமைப் போராட்டம்….!!! கூலி உயர்வு என்ற பெயரில் நடைபெற்றாலும் உண்மையில் அப்பேரணியானது மள்ளர் சமூகத்தின் அரசியல் எழுச்சிப் போராட்டம் என்பதை உணர்ந்து கொண்டது திராவிட […]

Continue Reading

அநீதியான அரசபயங்கரவாத நிகழ்வு – ஜீலை 23 தாமிரபரணி படுகொலை!

சர்வதேச வல்லாதிக்கம் எப்போதும் பூர்வ குடிகள் அழிப்பில் இருந்தே தனது போர் தந்திரத்தை தொடங்கும் அதற்கு அவை அந்த மண்ணில் போலி கருத்தியல்களை உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளும்…. தமிழர்களை சுரண்டி ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த திரிவடுகர்களின கருத்தியல் தளமான திராவிடம் தனது உண்மை முதாலளிகளான சர்வதேச ஏகாதிபத்தியத்தின் கிளை அமைப்பாக தான் தமிழகத்தின் செயல்பட்டுவருகிறது என்பதை வரலாறு தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான அரசபயங்கரவாதங்கள் அடக்குமுறைகளே, நிலைத்த சாட்சியாக இன்றும் நம் கண் முன்உள்ளது தோழர்களே… பல்வேறு தேசிய […]

Continue Reading

கிரேக்கம் படைத்த பாண்டியர்கள்/தமிழர்கள்

கிரேக்கத்திற்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்ப்பு இருப்பது பழங்காலத்து கிரேக்க – பாண்டிய கடல் வழி வணிகம் மற்றும் கிரேக்க கடவுள்கள் மற்றும் வழிபாட்டு முறை மூலம் விளங்கும் . கிரேக்க புராணங்களில் Battle of Thermopylae ( 300 ஸ்பார்டன்ஸ் – ஹாலிவுட் திரைப்படம் ) மிக முக்கியமான போர் …. உலகத்தின் பல பகுதிகளை தன் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்த பெர்சிய பேரரசன் Xerxes l , வெறும் 300 ஸ்பார்ட வீரர்களின் தாக்குதலில் தன் […]

Continue Reading

உலகம் முழுவதும் தமிழர்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும், “இந்திரவிழா எனும் நாற்று நடவு திருவிழா “

கோயம்பத்தூர் என்ற இன்றைய கோவை மாநகரம் உருவாகுவதற்கு முன்பு, இன்றைக்கு #பேரூர் என்ற அழைக்ப்படும் பகுதியே, கொங்கு பகுதி அரசாட்சியின் தலைநகராக இருந்தது… கொங்கு பகுதி பள்ளர்கள்,தங்கள் நல்லது, கெட்டது அனைத்தையும், இன்றுவரை பேரூர் பட்டீஸ்வரன் சிவன் கோவிலிலேயே செய்யும் பழக்கமுடையவர்கள்!!! விஜய நகர நாயக்கர்களால் பள்ளர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அக் கோயில் பள்ளர்களிடமிருந்து பறிக்கப்பட்டாளும், அக்கோயிலுக்கும் பள்ளர்களுக்குமான உரிமையை, இன்றுவரை யாராலும் பறிக்கமுடியவில்லை என்பதே, பள்ளர்கள் யார்…??? என்பதை, இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது!!! […]

Continue Reading