devendra kula vellalar history tamil

சதுர்வர்ண கொள்கையில் பள்ளர் யார்?

History Mallar/Pallar

நிலத்தை வாள் வலிமையால் வென்று அதிகாரத்தை அடைந்த குலங்கள் உயர்ந்த குலத்தினராகவும், உயர்ந்த குலத்தால் ஆதிக்கம் செய்யப்பட்டவை கீழ்குலமாகவும் உருவாகியுள்ளது. படிப்படியாக பலநூற்றாண்டுகளாக நிகழ்ந்துவந்த இந்த செயல்பாடு இன்றும் தொடர்கிறது.

சாதிப்படிநிலை என்பது நிலையானது அல்ல. நிலத்தைவெல்லும்சாதி அப்படிநிலையில் மேலே செல்வதும், நிலத்தை இழக்கும் சாதி கீழே வருவதும் இயல்பான ஒன்று. இவ்வாறு தான், பல்வேறு பகுதிகளில் நிலத்தை இழந்த பள்ளர், உழவுக்குத்தகைதாரர் நிலையெய்தியுள்ளனர். இக்காலத்தில் தான் பள்ளு நூல்கள் எழுதி அடிமையாக்க வரலாற்றை அழிக்க முற்பட்டனர்.

சதுர்வர்ணம் என்றால் என்ன?

சதுர்வர்ணம் என்பதை நால் வர்ணம் என்பர்.சதுர்வர்ணத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என வகைப்படுத்துவர். அஃதாவது, பிராம்மணர்,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்றும் நால்வகைக் குலம் என்றும் கூறலாம். ‘நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை’ என்று திவ்யப் பிரபந்தம் கூறுகிறது.

வர்ணம் பற்றிய ஔவையார் பாடல்:

“நூல் எனிலோ கோல் சாயும், நுந்தமரேல் வெஞ்சமராம்
கோல் எனிலோ அங்கே குடி சாயும்- நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணை ஆவான்
அந்த அரசே அரசு!”

முப்புரி நூல் அணிந்த அந்தணர் அமைச்சராக அமைந்தால் அந்த அரசின் செங்கோல் சாய்ந்து விடும். உறவினரான அரச குலத்தவனான க்ஷத்திரியன் அமைச்சனானால், கொடிய போரினை மூட்டி விடுவார்கள். நாலாவது குலத்தவரான வேளாளனோ நல்ல அமைச்சராக இருப்பான், அரச நெறிக்கு உற்ற துணையாக விளங்குவான். அவனைத் துணையாகக் கொண்டதே, நல்லரசாகவும் இருக்கும்.

பள்ளர்களின் பண்பாட்டு அடையாளங்கள் உணர்த்துவது என்ன?

வெண்குடை திருநாள்
செங்கோல் திருநாள்
பொன்னேர் பூட்டும் திருநாள்
நாற்று நடவு திருநாள்

வெண்குடை திருநாளும், செங்கோல் திருநாளும்:

இவ்விழாக்கள் அரச மரபினரால் கொண்டாடப்படும் திருநாள். இவ்விழாவினை பள்ளர் எனும் குடும்பர் மரபினரிடையே இருந்து வருவது அரச மரபின் தொடர்ச்சி ஆகும். இதனை சதுர்வர்ணத்தில் கூறுவதென்றால் அரசன் மற்றும் க்ஷத்திரியர் அடையாளமாகக்கூறலாம்.

பொன்னேர் பூட்டும் திருநாளும், நாற்று நடவு திருநாளும் :

இந்நிகழ்வுகள் உழவர்களின் பாரம்பரியம். சதுர்வர்ணத்தில் கூறுவதென்றால் வேளாளர். இந்நிகழ்வுகள், பள்ளர் மரபாரிடையே இருப்பதென்பது வேளாளர் என்பதை உணர்த்துவதாகும். பள்ளர் என்கிற சமூகத்தில் பல்வேறு மரபுகளும், குலப்பட்டங்களும் உள்ளன. புராண இதிகாசங்கள் முதல் சங்ககாலம் முதல் பொன்னேர் பூட்டும் நோம்பி பற்றிய குறிப்புகள் உள்ளன.

தேவேந்திரர்களின் பேரூர் நாற்று நடவு திருவிழா
தேவேந்திரர்களின் பேரூர் நாற்று நடவு திருவிழா

ஸ்ரீ ராமாயணம் 

ஸ்ரீ ராமாயணத்தில் மாதா சீதை, ஜனக மகாராஜாவுக்கு தெய்வ அனுக்கிரஹத்தால் கிடைத்த குழந்தை. அவர் பொன்னேர் பூட்டி ஒரு திருநாளில் உழுத போதுதான் நிலத்தடியில் சீதை கிடைக்கிறார். சீதை என்ற பேரே ஏர்கலப்பை நிலத்தில் உழுது செல்லும் பாதையை குறிப்பதாகும். ஏர்க்கலப்பையில் பாதையில் கிடைத்த குழந்தை எனவே சீதை என்று பேர் வைத்தார்கள்.

வேளாளரும், அரசனும் இணைந்தே செயல்பட்டுள்ளனர்.

பள்ளரின் மரபு மற்றும் குலப்பட்டங்களாக முறையே:

மரபுகள்:

  1. ஆத்தா
  2. அம்மா
  3. அஞ்ஞா
  4. அய்யா
  5. ஆயா

குலப்பட்டங்கள்:

  1. குடும்பன்
  2. காலாடி
  3. பள்ளன்
  4. கடையன்
  5. தேவேந்திர குலத்தான்
  6. வயக்காரர்
  7. பண்ணாடி
  8. பணிக்கர்
  9. மூப்பன்
  10. பலகான்

நாட்டார்:

  1. மான வீர வள நாட்டார் கொற்கை குட வள நாட்டார்
  2. பருத்தி கோட்டை நாட்டார்
  3. ஜீவந்திய நாட்டார்
  4. கொற்கை குட வள நாட்டார்
  5. அளத்து நாட்டார்
  6. சிக்க நாட்டார்
  7. செழுகை நாட்டார்

முக்கியமான கூட்டமுறைகள்:

  1. வெளியன் கூட்டம்
  2. குட்டுவன் கூட்டம்
  3. வீச்சு வலைகார மீனவன் கூட்டம்
  4. சடையன் கூட்டம்
  5. மாயன் கூட்டம்
  6. கந்தன் கூட்டம்
  7. வருணன் கூட்டம் (அ) கரையான் கூட்டம்
  8. கருத்தான் கூட்டம்
  9. சிலையான் கூட்டம்

மேற்கண்ட, பள்ளர் என அழைக்கப்படும் இனக்கூட்டத்தில் முறையே

  1. வெண்குடை திருநாள்
  2. செங்கோல் திருநாள்
  3. பொன்னேர் பூட்டும் திருநாள்
  4. நாற்று நடவு திருநாள்

போன்ற திருவிழாக்கள் நடத்தப்படுவதென்பது, அரசனாகவும், உழவராகவும், கடையராகவும் இருந்து ஆளுமை செலுத்தியதன் வெளிப்பாடேயன்றி வேறல்ல. உதாரணமாக, பள்ளர் இனக்கூட்டத்தில் உள்ள மரபார் சங்க இலக்கியங்களில் வேந்தன், மள்ளர், ஊரன், மகிழ்நன், கிழவன் மற்றும் கடைஞர் – கடைசியர் என்றும் அறியப்பட்டுள்ளனர்.

இன்று பள்ளர் என்று அறியப்படும் இனக்கூட்டத்தின் ஒரு வகையினர் அரசன் (அ) வேந்தன் (அ) வீரன் (அ) க்ஷத்திரியர் (அ) மள்ளர் ; மற்றொரு வகையினர் உழவர் (அ) மள்ளர் (அ) வேளாளர்; மற்றொரு வகையினர் கடையர் – கடைசியர் ஆவார்கள்.

பள்ளர்கள் தங்களுக்குள்ளாகவே நிர்வாக வசதிகளுக்காகவே அரசன், வீரன் , உழவர் மற்றும் கடையர் போன்ற பிரிவுகளை உருவாக்கி இருப்பதாகவே தெரிகிறது. பள்ளர்களின் அரசுகளில் பள்ளரே மேற்கண்ட படிநிலைகளில் பல்வேறு காரணங்களுக்காக வர்ணக்கொள்கை போன்ற சமூக அமைப்பை உருவாக்கியுள்ளது தெரிகிறது. ஆக, பள்ளர்கள் உழவராக மட்டும் அல்ல அரசன், வீரன் மற்றும் கடையராக பள்ளர் இனக்கூட்ட மரபினர் அறியப்பட்டு வருகிறார்கள்.

எனவே, சதுர்வர்ண கொள்கைக்கு பள்ளர் இனக்கூட்டத்தை ஒப்பீடு செய்தாலும் பள்ளர் உயர்ந்தவரே!

மேற்கண்ட செய்தி ஆய்வுக்கு உட்பட்டது.


2 thoughts on “சதுர்வர்ண கொள்கையில் பள்ளர் யார்?

  1. நாட்டார் என்றால் என்ன பள்ளர் என்று பொருள் ஆ

    1. தேவேந்திரகுல வேளாளராகிய நமக்கு பெருமை சேர்க்கும் பெயர்களில் பனிரெண்டாயிரம் கோத்திரங்கள் உண்டு. அவற்றில் சில நாட்டார் பெயர் கொண்டவை. உதாரணம்
      பருத்திக்கோட்டை நாட்டார் – http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535342
      வீரநாட்டார் உறவின்முறை – https://www.youtube.com/channel/UCGxdaC0n-7h8HSOFKj488TA/featured
      சிக்கை நாட்டார் – https://www.facebook.com/தேவேந்திரகுல-சிக்கை-நாட்டார்-அஞ்ஞா-அற-மடம்-திருசெந்தூர்-287620295181548/
      மொத்த கோத்திரங்கள் – https://www.devendrantoday.com/devendra-kula-vellalar/பள்ளர்-கிளைகள்-தேவேந்தி/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *