தமிழ் நாட்டில் உள்ள கோயில்களின் அமைப்புகளுக்கும்,
கப்பல்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன்…!!
நான் கல்லூரியில் படிக்கும் போது தேசிய மாணவர் படையின்(Ncc) கப்பல் படை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு,
சென்னை, விசாகப் பட்டிணம் உள்ளிட்ட கடற்படை தளத்திங்களில் பல்வேறு ஆயுத பயிற்சிகள் எடுத்ததோடு,
சுமார் 6 மாதத்திற்கும் மேல் இந்திய கடற்படையின் பல கப்பல்களில் பயணித்திருக்கிறேன்…….!!
ஒரு கப்பலை உச்சியில் இருந்து பார்த்தால் என்ன வடிவத்தில் இருக்குமோ,
அதே வடிவத்தில் இந்த கோயில்களும் உள்ளன!
ஒருவேலை நம் முப்பாட்டன்கள் கடல் தாண்டி நாடு பிடிக்க உதவிய தங்கள் கப்பல்களின் மாதிரி வடிவத்திலேயே, தங்களின் முன்னோர்களுக்கு கோயில்களை கட்டியிருப்பார்களோ என்று என்ன தோன்றுகிறது…!
ஏனெனில்,
உலகின் முதல் கடலோடிகள் தமிழர்கள் என்றும்,
அதிலும் குறிப்பாக பள்ளர்கள் அக் கடலுக்கே அரசர்களாக இருந்தவர்கள் என்கிற வரலாற்றை மெய்ப்பிக்கும் சான்றுகள் இன்று உலகம் முழுவதிலுமிருந்து கிடைத்துவரும் நிலையில்,
நம் கோயில்களின் வடிவமைப்பு மட்டுமல்லாமல்,
அதன் அடையாளங்கள் பலவும் கடலோடு தொடர்புடையதாகவே உள்ளன!!
குறிப்பாக கொடிமரம் என்பது கப்பல்களில் பாய்களை கட்ட பயன்படுத்தப்பட்ட மரமாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்!.
அதிலும் குறிப்பாக அக் கொடிமரங்கள் கடல் ஆமைகளின் மீது அமைக்கப் பட்டுள்ளது என் கணிப்பை உறுதிசெய்வதாகவே உள்ளது.
நான் கடற்படை பயிற்சியில் இருந்த போது, பாய்மர படகை செலுத்துவதும், கடலின் எதிர் அலைக்கு துடுப்பு போடுவதும்( அதுவும் இடது கைக்கு), மற்றவர்களை விட எனக்கு மிக எளிதாக வந்தது..
வெரும் உடல் வலிமையினால் மட்டுமே இதை செய்து விட முடியாது நண்பர்களே, அதற்கு கடல் அலைகளையும், அதன் நீரோட்டத்தையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் வேண்டும் ( it’s an technology) ..!!
மற்றவர்களெல்லாம் சோர்ந்து விட்டாலும், என்னால் மட்டும் சோர்வில்லாமல் சுமார் 25 அடி துடுப்பை எதிர்அலையில் மணிக்கனக்கில் செலுத்த முடிந்ததிற்கான காரணம் எனக்கே இப்போது தான் புரிகிறது!,
தென் தமிழகத்தின் பழங்கால கோயில்கள் அனைத்ததிலும் உள்ள தேர்களை ஓட்டும் உரிமை இன்றும் பள்ளர்கள் வசமே உள்ளது ..
அது உரிமை என்பதை காட்டிலும், அது ஒரு டெக்னாலஜி சார்ந்த விசயமாகவே நான் பார்க்கிறேன்..
ஆம் கடலில் கப்பல் செலுத்துவதற்கும், இந்த தேர் செலுத்தும் சடங்கிற்கும் 100% தொடர்பு உள்ளதாகவே கருதுகிறேன்!..
அது ஒரு ஜெனடிக் கேரக்டராகவே பள்ளர்களிடம் இருப்பதால் தான், அவர்களால் மிக எளிதாக பிரமாண்ட தேர்களை எளிதாக ஓட்ட முடிகிறது…
மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு கடல் சம்பந்தமான விழாக்கள் பள்ளர்கள் தலைமையிலேயே இன்றுவரை நடந்து வருவது,
கடலுக்கும், கோயில்களுக்கும், பள்ளர்களுக்கும் உள்ள தொடர்பையும், பல்வேறு வரலாற்று செய்திகளையும் மெய்ப்பிக்கிறது…
மேலும் கப்பலுக்கு தமிழில் வங்கம் என்ற பெயரும், அதை செலுத்தியவர்களுக்கு வங்க பள்ளர் என்ற பெயரும் உண்டு.. இந்த பெயரின் நீட்சியே வங்க கடலும், வங்காளம் போன்ற பெயர்களும்!! .
உண்மையில் இன்றைய தமிழகத்தின் மீனவர்கள் அனைவரும் மாபெரும் கடலோடிகளான அன்றைய பள்ளர்களின் இன்றைய எச்சங்களே!!!
அதனால் தான் பள்ளர்களும், அவர்களின் பிரிவினரான மீனவர்களும்,
தமிழின பகைவர்களால் தொடர்ந்து ஒடுக்கப் படுகின்றனர்…
நம் தமிழர்களின் வரலாற்று பெருமைகள் மட்மல்ல,
நம் அரசியல் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் நம் கோயில்களிலும், அதன் விழாக்களிலும் புதைந்து உள்ளது தோழர்களே!!!…
அதை கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டிய நாம், அறியாமையிலும் எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கும் பலியாகி கிடக்கிறோம்!!!
விழித்துக் கொள்ளுங்கள்!,
இல்லையேல்
ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவோம்!!!,..
Thanks to
செல்வகுமார்.
தமிழர் வரலாற்று நடுவம்.