அனைவருக்கும் வணக்கம். எனது மனதில் எழும் கேள்வியை இங்கு உங்கள் முன் வைக்கிறேன். தவறாமல் முழுமையாக படிக்கவும்.
சரவணன் என்ற நான் பிறந்து வளர்ந்தது என்னவோ திருச்சிராப்பள்ளி நகரம் என்பதால் தீண்டாமை போன்ற விஷயங்களை பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை, ஆனால் பள்ளி படிப்பு முடிக்கும் சமயம்தான் எனக்கு என்னுடைய சாதி என்பது “பள்ளன்” என்பதும் அது பட்டியல் சாதியில் அதாவது SC (தாழ்த்தப்பட்ட சாதி பட்டியல் என்பது தவறான அர்த்தம்) பட்டியலில் உள்ளது என்பதை தெரிந்துகொண்டேன், அப்பொழுது SC பட்டியலில் உள்ள அனைத்து சாதியினரும் ஒரே சாதிதான் என்ற தவறான புரிதலும் எனக்கு இருந்தது.
ஆனால் எனக்கான துணையை தேடும்பொழுதுதான் SC பட்டியலில் உள்ள அனைவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஒவொரு சாதிக்கும் தனி குலத்தொழில், வாழ்வியல், வழிபாட்டு, பண்பாட்டு வரலாறுகள் உள்ளன என்றும் SC பட்டியல் சாதியினர் அந்த பட்டியலுக்குள்ளே உள்ள மற்ற சாதியினருடன் பொதுவாக திருமண உறவு வைத்து கொள்வதில்லை என்பதையும் எனது தந்தை சுப்ரமணியன் மற்றும் தாய் புஷ்பம் அவர்களின் மூலம் தெரிந்துகொண்டேன்.
மேலும் எனக்கான என்னுடைய சாதியை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் காரணமாக நமது பள்ளர் சமூகத்தின் வரலாறு பற்றிய தேடலில் நமக்கு முற்கால பெயர் மள்ளர் என்றும் தேவேந்திர குலம் என்ற பட்டம் கொண்டு சேர, சோழ பாண்டிய நாட்டில் நாடாண்ட இனமாக வாழ்ந்து வந்ததும் 14 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு வீழ்ச்சி அடைந்ததாகவும் தெரிந்துகொண்டேன், மேலும் நமக்கு குடும்பன், மூப்பன், காலாடி, பண்ணாடி, கடையன், வாதிரியான் என்ற பட்ட பெயர்களும் இந்திரன் வம்ச வழியினர் என்றும் தெரிந்துகொண்டேன்.
நான் தெரிந்துகொண்ட விஷயங்கள் உண்மையா என்று ஊர்ஜிதம் செய்ய எனது அம்மா புஷ்பம் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், உங்கள் ஊரில் உங்கள் சாதியை என்ன சொல்லி அழைப்பார்கள் என்றேன், அவர் சொன்னார் முன்பெல்லாம் நான் சிறு பிள்ளையாக இருக்கும்பொழுது சருகணி சந்தைக்கு சென்று திரும்பும்பொழுது வழியில் உள்ள மறவர்களின் குடியிருப்பு பகுதில் உள்ள வீடுகளில் தண்ணீர் கேட்கும்பொழுது நீங்கள் யார் வீட்டு பிள்ளைகள் என்று கேட்பார்களாம், அப்பொழுது எங்கள் அம்மா நாங்கள் குடும்பமார் வீட்டு பிள்ளைகள் என்று கூடுவார்களாம், அவர்களும் சரி என்று குடிநீர் தருவார்களாம், அதே நேரத்தில் அருகில் உள்ள வேறு சாதி குழந்தைகளை புரத்தான்பிள்ளை என்று கூறுவார்களாம் (அவர்கள் யார் என்பதை இங்கு சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்),
மேலும் அந்த காலத்தில் கோயில் திருவிழாவின் போது கங்காணி வீட்டில்தான் விரதமிருந்து முளைப்பாரி வளர்ப்பார்களாம், முளைப்பாரி எடுத்து செல்ல அவர்களை அழைத்துச்செல்ல மறவர்கள் குடை, கம்பு, கிடுவட்டி (வாத்திய கருவி), மேளம் ஆகியவற்றுடன் கங்காணி வீட்டுக்கு வந்து அழைத்து செல்வார்களாம், பிற்காலத்தில் அந்த முறை கைவிடப்பட்டதாம்,
அம்மாவின் தாய் வழி தாத்தா வெள்ளையன் அவர்கள் மற்றும் அவரது சகோதரர்கள் அரசன் வீட்டு வம்சம் என்பதை நான் கேள்வி பட்டிருக்கிறேன், வெள்ளையன் தாத்தா அவர்களுடன் பிறந்த ஒரு தாத்தாவின் பெயர் அரசன் என்பதுவும் எனக்கு தெரியும், பொதுவாக அப்பாவின் பெயரை மகனுக்கு வைக்க மாட்டார்கள் ஆனால் தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைப்பார்கள், அப்படியானால் அரசன் தாத்தாவின் தாத்தா பெயர் அரசனாகதானிருக்கும் (எனக்கு தாய்வழி எள்ளு தாத்தா).
நான் கூறும் அரசன் தாத்தா என்பவர் எனக்கு நான்கு 80 வருடம் மூத்தவர் அப்படியானால் எள்ளு தாத்தா அரசன் என்பவர் குறைந்தது 200 வருடம் மூத்தவர் என்பதை புரிந்துகொண்டேன்.
இன்றைய நாட்களில் யார் வேண்டுமானாலும் தனது பெயரை ராஜா, ராஜராஜன், ராஜராஜ சோழன், பாண்டியன், அரசன் என்று அரசர்களின் பெயரை வைத்துக்கொள்ளலாம் ஆனால் சுமார் 200 வருடங்களுக்கு முன் அரசர்கள் ஆட்சி காலத்தில் சாதாரண ஒருவருக்கு அரசன் என்ற பெயர் வைக்க முடியுமா, நிச்சகியமாக முடியாது அப்படியானால் எள்ளு தாத்தா அரசன் அவர்கள் உண்மையாக அன்று அரசனாக இருந்திருக்கிறார் அதனால் தான் தாத்தாவுக்கு அரசன் என்ற பெயர் வைத்துள்ளார்கள் என்பதை உணர முடிந்தது.
மேலும் எனது குழந்தைக்கு எனது அம்மாச்சி முத்துபேச்சி தாலாட்டு பாடும்பொழுதும், அம்மா நாற்றுநடவு பாட்டு பாடும்பொழுதும், நம்மை இந்திரன் வம்சம் என்று பெருமையாக உச்சரித்ததை கூர்ந்து கவனித்தேன்.
மேலே உள்ள பாரம்பரியதுடன் உள்ள பள்ளர் என்று இன்று உள்ள மள்ளர் வழி இந்திரா குலா வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு எப்படி தீண்டாமை குறியீடு பொருத்தமாகும் என்பதே எனது கேள்வி. SC பட்டியல் என்பது வேறு, வாழ்வியல் என்பது வேறு, உண்மையில் அன்றைய காலத்திலும் சரி இன்றைய காலத்திலும் சரி நமக்கு தீண்டாமை குறியீடு கிடையாது ஆனால் நாம் SC பட்டியலில் இணைந்தவுடன் பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட கொள்கையான கடவுள் இல்லை என்ற கருத்தை உள்வாங்கி, கோவில்களுக்கு செல்லும் பழக்கத்தை கைவிட்டோம், அடுத்து பிறப்பு, இறப்பு சடங்குகளை மறந்தோம் (ஒருவரின் பிறப்பு இறப்பு சடங்கை பார்த்து அவரின் சாதியை கணித்து விடலாம், இறந்தவரை பாடையில் கொண்டு செல்வது மற்றவர் பழக்கம் ஆனால் அரசனுக்குரிய தேரில் கொண்டு செல்வது நமது பழக்கம்), நமக்கான குலப்பெருமைகள் அனத்தும் கோவில்களிலும் வழிபாட்டு முறைகளிலும் மறைந்து கிடக்கும்பொழுது நாம் நமது கடவுள் மறுப்பு கொள்கையால் உரிமைகளை இழந்தோம், இன்று SC என்ற பாட்டியல் சாதிக்குள் திராவிட கடவுள் மறுப்பு கொள்கையுடன் நமது சமூக முன்னேற்றத்திற்கு போராடுகிறோம், ஒன்றை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும், ஒரு இடத்தில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்ய சமூக அக்கறையுடன் வெள்ளை சட்டையுடன் சாக்கடையை சுத்தம் செய்ய முயல்பவனின் சட்டையும் உடலும் சாகடையாகி பிற சமூகத்தவர் அவனையும் சாக்கடை என்று பார்க்கும் நிலைக்கு வந்துவிடுவான் என்பது இன்றைய உலகின் உண்மை, பள்ளர் என்ற தேவேந்திரரின் நிலைமையும் இதுவே, வாம்சம் என்ற குருதியின் பண்புகளால் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கலைய நினைத்த நாமும் இன்று SC தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்.
ஒரு குடும்பம் தன் குடும்ப முன்னேற்றம் பற்றிய சிந்தனை பற்றி பேச தன் குடும்ப உறுப்பினர்கள் உடன் சேர்ந்து பேசுவது சரியா அல்லது பக்கத்து வீட்டு காரரையும் நம்முடன் சேர்த்துக்கொண்டு நம் குடும்ப முன்னேற்றம் பற்றி பேசுவது சரியா?? அப்படித்தான் நாம் நமது சமூக முன்னேற்றம் பற்றி சிந்திக்கும்பொழுது SC பட்டியலில் உள்ள மற்ற இன சகோதரர்களையும் இணைத்து SC முன்னேற்றம், திராவிடம், பெரியாரியம் என்பது நம்மை இன்னும் பின்னுக்கு தள்ளி தீண்டாமை தீயில் கொண்டு விடும் என்பது எனது கருத்து,
நான் யாரையும் புண்படுத்தவோ, தாழ்த்தி கூறவோ இந்த பதிவை போடவில்லை, மாறாக எனது சமூகத்தை பற்றிய புரிதலை உங்களுக்கு விளக்கவே இந்த நீண்ட பதிவு,
தனது வரலாறுகளை மறந்த இனம் அழிந்துவிடும்.
வாழ்க மள்ளர் வம்சம், வளர்க தேவேந்திரர் புகழ்.
என்றும் அன்புடன்,
சுப.சரவணன், பொறியாளர்,
திருச்சிராப்பள்ளி.
super
தேவேந்திரகுல மக்கள் SC பட்டியலில் இருந்து வெளியேவர உங்களுக்கு சம்மதமா?
இந்த இணையதளத்திற்கு சென்று வாக்களியுங்கள்.
https://www.devendrantoday.com/live-e-poll/