கொடியன்குளம் சம்பவமுனா என்ன?
ஊர் குடும்பன்னா யாரு ?
என மாற்று சமூகத்தவர்கள் என்னிடம் கேட்கும் போது. வென்று விட்டான் இயக்குநர் மாரி செல்வராஜ் எனத் தெரிகிறது. ஒரு அரச பயங்கரவாதம் அரசியலால் தாக்குதலுக்கு உள்ளான ஒரு சமூகத்தின் ஊரையும், வலியையும், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின்னர் பேச வைத்துள்ளான் இயக்குநர் மாரி செல்வராஜ்.
அதென்ன ஊர் குடும்பன்
ஆம் அவனே மனித இன தோற்றத்தின் தலைவன் நிலையில் முதலில் தோன்றியவன். என்பதையும், அவன் அரசனின் முதற் படி நிலையில் உள்ளவன்….வேந்தனாகிய அரசனுக்கு தலையில் எப்படி மகுடமோ, அதுபோல ஊரை காக்கும் குடும்பனுக்கு தலையில் கட்டியுள்ள தலைப்பாகை எனும் துண்டே.
ஊர்க்குடும்பன்” என்ற காரணப்பெயர் பொது சமூகம் தெரிந்துகொள்ளட்டும்
இத்தனை ஆண்டுகளா தமிழ் சினிமா எத்தனையோ பெயர்களை பெருமையாகவோ சிறுமையாகவோ பதிவுசெய்திருக்கும்.
வஞ்சிக்கப்பட்ட தரப்பிலிருக்கும் காரண பட்டப்பெயர்கள் வெகுஜன தன்மை அடையாது சாதிய போக்கில் அங்கிகரிக்கப்படாமலே போனது. வெகுஜன சினிமாவான கர்ணனில் பதிவு செய்யப்பட்டிருக்கும் “ஊர்க்குடும்பன்” என்ற காரணப்பெயர்.
உழவு, ஊர் பொதுவாண்மை, ஒன்றாக கூடி கொழைதல் போன்ற குடும்பு முறைக்கு காரணமானது. அது படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதாபாத்திரமும் காரணமும் கூட. அதே தான், தலைப்பாக்கட்டில் காட்டப்பட்டிருக்கும் சம்பவமும் கூட . பொது சமூகத்தால் சாதியப்போக்கில் அங்கிகரிக்கப்படாமலே போனது தான்.
எத்தனையோ சிற்றூர்களில் வாய்க்கால் வரப்புகளில் களத்து மேட்டுகளில் ஊர் திருவிழாக்களில் அங்கிகரிக்கப்பட்ட குடும்பன்மார்கள். இந்து வர்ணாசிரம தர்மத்தால் புறக்கணிக்கப்பட்டது,சாதிய மேலாதிக்க அரசியலால் அங்கிகரிக்கப்படாமல் போனது மனுதர்ம உளவியல் தான்.
துரியோதனக் குடும்பனோ சமயக்குடும்பனோ உழைக்கும் உழவு வர்க்கப்பிரிவின் தலைமைகள். அவர்களை பொது சமூகம் தெரிந்துகொள்ளட்டும் பேசுபொருளாகட்டும்.
அடுத்த சாதியை அசிங்கமா பேசி படமெடுத்து சம்பாதிக்கும் இயக்குநர்கள் மத்தியில் எந்த சமூகத்தையும் இழிவு செய்யாமல். மனிதனுக்கு மிக முக்கியமானது மனித நேயமும். சம பகிர்வும் தான் என்பதை எடுத்து காட்டி தனது குலத்தின் பெருமையை பறைசாற்றிய இயக்குநர் மாரி செல்வராஜ் க்கு நன்றிகள் பலகோடி.