karnan movie review

கர்ணன் மாறுபட்ட திரைகண்ணோட்டம்

Cinema Devendra Kula Vellalar கொடியன்குளம் கலவரம்

  • கர்ணன் மகாபாரதத்தில் கண்ணபிரானின் (கிருஷ்ணன்) சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் கர்ணன்.
  • திரைக்காவியத்தில் கண்ணபிரானை(SP) கர்ணன் நேரடியாக வெட்டிக் கொலை செய்கிறான்.
  • இதிலிருந்து தெரியவருவது என்னவெனில், இயக்குநர் மாரி செல்வராஜ் கணக்கை நேர்செய்திருக்கிறார் என்றகோணத்தில்தான் படத்தை பார்க்க வேண்டும்.
  • மகாபாரதத்தில்துருபதன் சபைதனில் துரௌபதியின் சுயம்வரத்தில், வானில் மிதக்கும் நீரில் சுற்றிவரும் மீனின் கண்ணினை கீழே உள்ள தடாகத்தை பார்த்து மேலே அம்பெய்து பறிக்க வேண்டும். தன் பெரியப்பா மகன் என தெரியாமல் உற்ற நண்பனாக ஏற்றுக்கொண்ட துரியோதனுக்காக வாளேந்த முற்படுவான் கர்ணன். கிருஷ்ணன்(கண்ணபிரான்) சூழ்ச்சியால் துரௌபதி கர்ணனை நோக்கி, நீ தான் தாழ்ந்த குலமாயிற்றே? உன்னால் எப்படி இச்சுயம்வரத்தில் கலந்து கொள்ள முடியும் என்று வினா எழுப்புவாள். உடனடியாக கர்ணன் அச்சபைதனை விட்டு வெளியேறிவிடுவான். 
  • திரைப்படத்தில் கிராமத்தின் மீன் வெட்டும் காட்சியில் கர்ணன் வென்றிருப்பதன் மூலம் துரௌபதியை கர்ணன் வாள்வீச்சின் மூலம் வென்றுவிட்டான் என்றே பொருள் கொள்ள வேண்டும். மகாபாரத கதையில் மணக்க முடியாமல் போன துரௌபதி யினை இங்கே மணமுடித்து கணக்கை நேர் செய்து கொள்கிறான் கர்ணன். 
  • மேலும் திரைப்படம் மறைமுகமாக உணர்த்துவது என்னவெனில் துரியோதனன், கர்ணன், அபிமன்யு, துரோபதி, அர்ஜுனன் போன்ற பெயர்கள் “நாங்கள் அனைவரும் ஒன்று தான். எங்களை கண்ணபிரான் எனும் கிருஷ்ணன்தான் பிரித்து சண்டையிட்டு கொள்ளச் செய்கிறான்” என்றே உணர்த்துகிறது.
  • மற்றபடி திரைப்படம் என்பது ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கர்ணன் வாழ்ந்திருக்கிறான் .வாழ்ந்து கொண்டே இருக்கிறான் . அவன் சில பல விலங்கொடித்து வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டே இருக்கிறான்.

நன்றி
முகநூல் வாசகர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *