இந்து மதம் குறித்து சவுக்கு சங்கர் கேள்விக்கு, புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி டுவிட்டர் பதிவுகள்:
சவுக்கு சங்கர் டுவிட்டர் பதிவு;
தம்பி ஷ்யாம். உங்க அப்பாரை கூட்டிக்கிட்டு அப்படியே உங்க ஊரு கோவில் கருவறைக்குள்ள போயி பாரு. இந்து மதத்துக்கான வரையறை என்னன்னு பார்ப்பனர்கள் உங்க குடும்பத்துக்கே விளக்குவாங்க.
இதற்கு டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி டுவிட்டர் பதிவு;
இந்து மதத்திற்கு வரையறையே இல்லையாம் ஆனா மொத்த சாதிகளுக்கும் வரையறை கொடுத்தது இந்து மதமாம்.
இந்த முரண்பாடான பேச்சை தான் ஆஹா ஓஹோனு கொண்டாடுகிறார்கள்.
கருவறைக்குள் போயி பாரு, பிராமணர் பொண்ணு கொடுப்பானா என்பதை தாண்டி பேசி பழகுங்க…
பகுத்தறிவு இருப்பது போல முயற்சியாவது செய்யுங்கள்!
இதற்கு சவுக்கு சங்கர் டுவிட்டர் பதிவு;
மொத்த சாதிக்கும் வரையறை குடுத்தது இந்து மதம் இல்லாம யூத மதமா ? உண்மையிலயே படிச்சொருக்கியா மேன் நீ ?
இதற்கு டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பதிவு;
‘பார்ப்பன இந்து மதம் தான் சாதியை உறுவாக்கியது’
எந்த சாதியை உறுவாக்கியது?
மறவர், தேவேந்திரர், கோனார், வன்னியர், சாம்பவர், கவுண்டர் என்று எவரும் தங்கள் சாதி வேற்றவர் உறுவாக்கியது என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இங்கு ஒவ்வொரு சாதிக்கும் பெருமைகள் உண்டு, தோன்றிய வரலாறு உண்டு!
இந்து என்பது ஒரு சமூக வாழ்வியல் பண்பாட்டைக் குறிக்கும் தேசத்தின் அடையாளம் … சீனர்கள் இந்தியர்களை …இந்தியாவை இந்து என்றே அடையாளப் படுத்துகின்றனர் .